Tamilnadu Interim Budget தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் 2021-22 | NPM

தமிழக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பன்னீர்செல்வம்:-


முக்கிய அறிவிப்புகள்:-

 
1. கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்கு ரூ.13,352 கோடி செலவிடப்பட்டுள்ளது.
 
2.     தமிழ்நாட்டை நாட்டிலேயே தலை சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும்.
 
3.     ஜெயலலிதாவின் வேதாநிலையம் நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது.
 
4.     வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும். குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும். நிரந்தர இயலாமைக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.
 
5.     2021-22ம் ஆண்டில் நிலுவையில் உள்ள மொத்த கடன் 5,70,189 கோடி ரூபாயாக இருக்கும். மாநில மொத்த உற்பத்தி மதிப்பீடு 26.69 சதவீதமாக இருக்கும்.
 
6.     மொத்த கடன் 15ஆவது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளது. தமிழக அரசின் கடன் சுமை தற்போது ₹4.85 லட்சம் கோடியாக உள்ள நிலையில், அடுத்த ஓராண்டில் ₹5.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.
 
7.     தமிழக உயர்கல்வித்துறைக்காக ரூ.5,478.19 கோடி நிதி ஒதுக்கீடு. மேலும், 6ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
8.     அவினாசி-அத்திக்கடவு திட்டம் வரும் டிசம்பர் மாத இறுதியில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
9.     சத்துணவு திட்டத்திற்கு ரூ.1953.98 கோடி நிதி ஒதுக்கீடு.
 
10.  புதிதாக தொடங்கப்பட்ட மினி கிளினிக்குகளுக்காக ரூ.144 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
11.  நீர்வள ஆதாரத் துறைக்கு 6,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 
12.  வேளாண்மைத் துறைக்கு 1,738 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
13.  மீன்வளத் துறைக்கு 580 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 
14.  நீதித்துறை நிர்வாகத்துக்கு 1,437 கோடி ரூபாய் ஒதுக்கீடு
 
15.  ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 1,932 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 
16.  சமூக நலத்துறைக்கு 1,953 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 
17.  மாற்றுத் திறனாளிகளுக்கான வாய்ப்பு, வசதிகளை உறுதி செய்ய 1,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  சிறப்புத் திட்டம்.
 
18.  பள்ளிக்கல்வித்துறைக்கு 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 
19.  தீயணைப்பு துறைக்கு 436 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 
20.  சுகாதாரத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ₹19,420 கோடி ஒதுக்கீடு.
 
21.  1,580 கோடி ரூபாயில் மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.
 
22.  பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு 3,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 
23.  நெடுஞ்சாலை துறைக்கு 18,750 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 
24.  உள்ளாட்சி அமைப்புகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட மானியத்தின் பங்கு 90% -ல் இருந்து 40%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
 
25.  கோவை மெட்ரோ ரயில் திட்டம்-சாத்தியக் கூறு அறிக்கை தயாரித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ₹6683 கோடி ஒதுக்கீடு.
 
26.  தமிழர்களின் முக்கிய விழாவான தைப்பூசம் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
27.  டோரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நிதியுதவி செய்துள்ளோம்.
 
28.  மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ‘RIGHTS’ என்ற சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. திட்டத்திற்கு மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறையின் ஆய்வுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரசின் திட்டம் உலக வங்கியின் பரிசீலனையில் உள்ளது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
 
29.  தமிழகத்தில் 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் உள்பட 12 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும்.
 
30.  பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை குறைக்க மத்திய அரசுக்கு பட்ஜெட் உரையில் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை.
 
31.  ₹12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், பயிர்க்கடன் தள்ளுபடி திட்டதிற்காக இடைக்கால பட்ஜெட்டில் ₹5000 கோடி ஒதுக்கீடு.
 
32.  உள்ளாட்சி அமைப்புகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட மானியத்தின் பங்கு 90%ல் இருந்து 40%-ஆக குறைக்கப்பட்டுள்ளது!” - இடைக்கால பட்ஜெட் உரையில் ஓபிஎஸ் தகவல்.
 
33.  திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் 12.50 லட்சம் பேருக்கு ரூ.1,791 கோடியில் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. திருமண உதவித் திட்டத்தில் ரூ.4,371 கோடி நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
 
34. தலைவாசலில் அமைக்கப்படும் சர்வதேச தரத்திலான கால்நடை பூங்காவுக்கு கூடுதலாக ரூ.634.87 கோடி நிதி ஒதுக்கீடு.

35. ஒப்புதல் தரப்பட்ட அனைத்து பணிகளையும் நிறைவேற்ற 2021-22-ம் ஆண்டில் தேவையான நிதி ஒதுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடரை முழுமையாக திமுக புறக்கணிப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கலைஞர் ஆட்சி நிறைவின் போது தமிழக அரசின் கடன் ரூ.1 லட்சம் கோடியாக தான் இருந்தது. தற்போது அதிமுக ஆட்சியின் ரூ.5.7 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. விளம்பர மோகத்தால் கோடிக்கணக்கான பணத்தை தமிழக அரசு செலவழித்து வருவதாக துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

*****

“அதிகரிக்கப்பட்ட வரி விகித்தால் மத்திய அரசுக்கு பெருமளவில் வருவாய் கிடைக்கிறது... ஆனால், மாநிலங்களுக்கு எதுவும் பகிர்ந்தளிக்கப்படவில்லை

இடைக்கால பட்ஜெட் உரையில் ஓ.பன்னீர் செல்வம் மத்திய அரசு மீது குற்றச்சாட்டு.

*****

பிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடன் சுமை உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 10.9% தொழில் வளர்ச்சி 4.6% ஆக சரிந்துள்ளதாகவும், 5 மடங்கு கடன் வாங்கி அதிமுக ஆட்சி நடத்த உள்ளது என்று இடைக்கால பட்ஜெட் குறித்து பேசியுள்ளார்.

*****

தமிழக அரசின் இடைக்கால வரவு-செலவுத் திட்டம்; எந்தப் பயனும் இல்லை.

- வைகோ கருத்து.

*****

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part I | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM