நடிகர் விவேக் காலமானார் – 59 வயது 19.11.1961 - 17.04.2021 | NPM
மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் (வயது 59) காலமானார். நடிகர் விவேக்கின் உடல் சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. விவேக்கின் வீட்டில் அஞ்சலி செலுத்த ரசிகர்களும் திரை பிரபலங்களும் குவிந்துள்ளனர். விவேக் உடலுக்கு திரை உலக பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ***** நடிகர் விவேக் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல். நடிகர் விவேக்கின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தனது ஈடு இணையற்ற கலை சேவையாலும், சமூக சேவையாலும் தமிழகத்துக்கு பெருமை சேர்ந்தவர், நடிகர் விவேக். - முதலமைச்சர் பழனிசாமி ***** சின்னக் கலைவாணர் எனத் திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேக் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது. பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமைக்குரியவர்; கருணாநிதியிடம் தனி அன்பு கொண்டவர், நடிகர் விவேக் - திமுக தலைவர் ஸ்டாலின். ***** நடிகர் விவேக் காலமானார் என்ற செய்தி மனதை கலங்கச் செய்கிறது. ஹீரோக்கள் ஜோக்கர்களாக அம்பலப்பட்டு நிற்கும் இந்த காலத்தில் சமூக அக்கறையோடு பணியாற்றி நமது நெஞ்சங்களில் ‘நாயகனாக ’ உயர்ந்தவர். அ