Weekly Cinema சினிமா செய்திகள் 06.10.2020
இந்த வார சினிமா செய்திகள்
தீபாவளிக்கு வெளிவருமா 'மாஸ்டர்' ?
விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படம் தியேட்டர்களில் மட்டும்தான் வெளியாகும் என்று அறிவித்துவிட்டார்கள். நவம்பர் மாதம் 14ம் தேதி தீபாவளி வருகிறது.
எனவே, அன்றைய தினம் 'மாஸ்டர்' படம்
வெளிவந்தால் சரியாக இருக்கும்.
……
நாய்க்கு டப்பிங் - நடிகர் சூரி
ஸ்ரீநாத் ராமலிங்கம் 'அன்புள்ள கில்லி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிகை சிவரஞ்சனியின் மகன் மைத்ரேயா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் கில்லி என பெயர் கொண்ட நாய் ஒன்று நடிக்க வைக்கப்பட்டுள்ளது. இந்த நாயின் குரலில் திரைக்கதை நகர்வது போன்று கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாய்க்கு காமெடி நடிகர் சூரி டப்பிங் கொடுத்துள்ளார்.
……
சினிமா தியேட்டர்கள் திறக்க - கட்டுப்பாடுகள்
வெளியீடு
சில நாட்களுக்கு முன் 50 சதவீத பார்வையாளர்களுடன் அக்., 15 முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கிய மத்திய அரசு இன்று (அக்., 6) அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
· 50 சதவீத இருக்கைகளில்
மட்டும் ரசிகர்களை அனுமதித்து தியேட்டர்களை திறக்கலாம்.
·
சினிமா தியேட்டர்களில், ஒரு
இருக்கை இடைவெளி விட்டு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்
·
ஒவ்வொரு காட்சி முடிந்த
பின், கிருமி
நாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும்.
·
அனைவரும் மாஸ்க்
அணிந்தபடி படம் பார்க்க அனுமதிக்க வேண்டும்
·
தியேட்டர் உள்ளே
பாக்கெட்களில் அடைத்து வைக்கப்பட்ட நொறுக்கு தீனிக்கு மட்டுமே அனுமதி வழங்க
வேண்டும்.
·
ஆன்லைன் டிக்கெட் மூலம்
முன்பதிவு செய்ய பார்வையாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
·
தியேட்டரில் 24 முதல் 30 டிகிரியில்
ஏ.சி., அளவை
பராமரிக்க வேண்டும்.
·
ரசிகர்கள்
தியேட்டருக்குள் செல்லும் போது சானிடைசர் வழங்கப்பட வேண்டும்.
·
திரைப்பட இடைவேளையின்
போது ரசிகர்கள் இருக்கைகளை விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.
·
கூட்டத்தை தடுக்க
டிக்கெட் விற்பனைக்கு கவுண்டர்கள் நாள் முழுவதும் திறந்து வைக்கப்பட வேண்டும்.
·
ரசிகர்களின் உடல்
வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே தியேட்டருக்குள் அனுமதிக்க வேண்டும்.
·
கொரோனா அறிகுறி இருந்தால்
தியேட்டருக்குள் அனுமதிக்கப்படக்கூடாது.
·
திரைப்படம் துவங்கும்
முன்பும் இடைவேளையின் போதும் கொரோனா விழிப்புணர்வு குறும்படங்களை திரையிட
வேண்டும்.
……
திருமணத்தை அறிவித்த காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால் அக்., 30ல் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவை திருமணம் செய்ய இருக்கிறார்.
இதற்கான அறிவிப்பை அவரே வெளியிட்டுள்ளார்.தனது திருமண அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் காஜல்.
……தமிழில் - தெலுங்கு 'ஆபீசர்'
கடந்த 2018ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற படம் 'ஆபீசர்'. நாகர்ஜுனா நாயகனாக நடித்திருக்கும் படத்தை தற்போது இந்தப் படம் 'சிம்டாங்காரன்' என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியாக உள்ளது. இம்மாதம் திரையரங்குகள் திறந்த பின்னர் படம் வெளியாக உள்ளது.
……
பாலாவின் 'வர்மா'
துருவ் விக்ரம் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வர்மா படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படம் இன்று இந்தியாவைத் தவிர உலகம் முழுவதும் ஓடிடி தளத்தில் வெளியிடுவதாக அறிவித்தனர்.
ஆனால் எந்த அறிவிப்பும் இன்றி இந்தியாவிலும் வெளியிட்டுள்ளனர். படம் மக்களை சரியாக சென்றடையும் முன்பே அதை பைரசியாக வெளியிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.
……
‘எக்கோ’
சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர்.ராஜசேகர், ஹாரூன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்குகிறார்.
ஜான் பீட்டர் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை ஏக்நாத் எழுதுகிறார். 'கில்லி', 'தூள்', 'தடம்' உள்ளிட்ட
பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். நேற்று இந்த
படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பூஜையுடன் தொடங்கியது.
……
OTT ரிலீஸ்
சூரரைப் போற்று படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடுப்படும் என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். படம் இந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகிறது.
Nice, all the news, specially for kajal agarwal marriage announcement
ReplyDelete