Today News செய்திகள் 18.10.2020 | NPM
Today News 18.10.2020 | NPM
வரும் 20ம் தேதியில் சென்னை, வட தமிழகத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்வதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக பிரதீப் ஜான் தெரிவிச்சிருக்கார்.
-----
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.
-----
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் புதுக்கோட்டை, திருச்சியிலும் கனமழைக்கு வாய்ப்பு.
பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.
-----
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிச.14-ம் தேதி முதல் 2021, ஜன.4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
-----
இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மரபணு திருத்த தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட புதிய நோய்த்தொற்று பரிசோதனை முறைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
-----
3 நாள் பயணமாக நாளை சொந்த தொகுதியான வயநாடு செல்கிறார் ராகுல்காந்தி.
-----
ஐ பி எல் கிரிக்கெட் போட்டியில், இன்று ஐதரபாத் அணி - கொல்கத்தா அணியையும், மும்பை அணி - பஞ்சாப் அணியையும் எதிர்கொள்கின்றன.
-----
தமிழகத்தில் வேலைவாய்ப்புத் திட்டங்களை போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்த - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.
-----
இன்று - 30 ஆண்டுகளுக்கும் மேலாக சத்தியமங்கலம் வனப்பகுதியை மையமாக கொண்டு தனி ராஜ்ஜியமே நடத்திய வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட நாள்.
-----
பண்டிகைக் கால சிறப்பு ரயில் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது! தீபாவளி உள்ளிட்ட பண்டிகையையொட்டி 7 சிறப்பு ரயில்களை இயக்குகிறது ரயில்வே.
-----
தாமஸ் ஆல்வா எடிசன் இன்று இவரின் 89வது நினைவு தினம்.
மின்சார பல்பு, எலக்ட்ரிக் ஜெனரேட்டர், டெலிகிராப் சிஸ்டம், எலக்ட்ரிக் ஃபேன், ரேடியோ வால்வ், மெகா போன், மோட்டார், மின்சார இருப்புப் பாதை, தொலைபேசி ஸ்பீக்கர், ஒலிப்பெருக்கி, கிராமஃபோன், மூவி கேமரா, ராணுவ சாதனங்கள் ஆகியவை இவரது கண்டுபிடிப்பு.
-----
மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்பதில் தவறேதும் இல்லை -அமித்ஷா
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது - அமித்ஷா குற்றச்சாட்டு.
-----
புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சிக் கடைகளில் கூட்டம்.
-----
முக்கூடல் பகுதியில் வளர்ப்பு யானை திடீர் மரணம். வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
-----
ரயில்வேயில் காலியாக உள்ள இடங்களில் 5 ஸ்டார் ஹோட்டல்கள், மால்கள் துவங்க ரயில்வே முடிவு நாகர்கோவிலிலும் அமைக்கும் திட்டம்.
-----
நியூசிலாந்து தேர்தலில் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னின் கட்சி வரலாற்று வெற்றி பெற்று சாதனை.
-----
நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு.
-----
Comments
Post a Comment