Today News செய்திகள் 09.10.2020 | NPM
Today News 09.10.2020 | NPM
தமிழகம் முழுவதும் 2,650 கோடி மதிப்பிலான
ஊராட்சி மன்றங்களின் சாலை மேம்பாட்டு டெண்டர்களை
ஊராட்சி மன்றங்களின் அனுமதி இல்லாமல், அதிகாரியிட்ட அறிவிப்பாணையை சென்னை நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
-------
சென்னை மியாட்
மருத்துவமனையில்
இருந்து
விஜயகாந்த்
டிஸ்சார்ஜ்:
கொரோனா சிகிச்சைக்கு
பிந்தைய
தொடர்
மருத்துவ
கண்காணிப்பிற்காக
தேமுதிக
தலைவர்
விஜயகாந்த்
மீண்டும்
மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார்.
விஜயகாந்த் உடல்
நிலையில்
நல்ல
முன்னேற்றம்
ஏற்பட்டதால்
டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டுள்ளார்
- மியாட்
மருத்துவமனை
-------
நேற்று (08.10.2020) மத்திய உணவுத்துறை
அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடல் நலக்குறைவால் காலமானார்.
டெல்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை
செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.
மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்
உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்
என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் திரு. ராம்விலாஸ் பாஸ்வான் - முதல்வர் பழனிசாமி
இரங்கல்!
மத்திய அமைச்சர்
ராம்விலாஸ்
பஸ்வான்
மறைவையடுத்து
அவர்
வகித்து
வந்த
உணவுத்துறையை
பியூஸ்
கோயல்
கூடுதலாக
கவனிப்பார்-குடியரசுத்தலைவர்
ராம்நாத்
கோவிந்த்
அறிவிப்பு.
-------
தமிழ் திரைப்பட
தயாரிப்பாளர்
சங்கத்திற்கான
தேர்தல்
தேதி
அறிவிப்பு:
நவ.22ம்
தேதி
தமிழ்
திரைப்பட
தயாரிப்பாளர்
சங்கத்திற்கு
தேர்தல்.
வருகிற 15ம்
தேதி
காலை
11 மணி
முதல்
23ம்
தேதி
மாலை
3.30 மணி
வரை
விண்ணப்பம்
வினியோகம்.
பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பத்தை
23ம்தேதி
மாலை
4 மணிக்குள்
தாக்கல்
செய்ய
வேண்டும்.
23ம்தேதி
வேட்புமனு
பரிசீலனை,
24ம்தேதி
வேட்புமனுவை
வாபஸ்
பெற
கடைசி
நாள்.
29ம்தேதி
மாலை
6 மணிக்கு
இறுதி
வேட்பாளர்
பட்டியல்
வெளியாகிறது.
-------
+1, +2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் அக்.14 முதல் வழங்கப்படும்.
மாணவர்களுக்கு பள்ளிகளிலும், தனித்தேர்வர்களுக்கு தேர்வு மையங்களிலும் அசல் மதிப்பெண் சான்று தரப்படும்.
-------
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. விளாத்திகுளம் மார்க்கண்டேயன் திமுக-வில் இணைந்தார்.
-------
வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு.
வட்டி விகிதம் தொடர்ந்து 3.5 சதவீதமாகவே
இருக்கும்.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும்
கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4% ஆகவே தொடரும்: ஆர்.பி.ஐ
-------
அக்டோபர் மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை
உலக முட்டை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது
1996-ம் ஆண்டு முதல் வருடம்தோறும் அக்டோபர் மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
-------
சுவாதி படுகொலை சம்பவத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட நுங்கம்பாக்கம் திரைப்படம் வரும் 24 ம் தேதி OTT யில் வெளியாகிறது - இயக்குனர் ரமேஷ் செல்வன்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இரண்டரை ஆண்டு போராட்டத்திற்கு பிறகு நுங்கம்பாக்கம் திரைப்படத்தை வெளியிடுவதாக சொன்னார்.
-------
“கிரிக்கெட் போல பிற விளையாட்டுகளுக்கும்
முன்னுரிமை தர வேண்டும்"
“அனைத்து வகை விளையாட்டு
வீரர்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்"
உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் என்.கிருபாகரன்,
பி.புகழேந்தி கருத்து.
-------
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256
உயர்வு:
ஒரு கிராம் தங்கம் ரூ.4,842ஆக உள்ளது.
ஒரு சவரன் தங்கம் ரூ.38,736-க்கு விற்பனை.
-------
இந்திய வானிலை மையம்
அந்தமானை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதியில்
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
-------
அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள்
மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பு 30ல் இருந்து 32 ஆக உயர்வு!
-------
சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் பீகார்
மற்றும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மத்திய
பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில்
தேர்தல் கூட்டங்களுக்கு தற்போதில் இருந்தே அனுமதி வழங்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம்
உத்தரவிட்டுள்ளது.
-------
மத்திய தொல்லியல் படிப்புக்கான கல்விதகுதியில்
மீண்டும் தமிழ்மொழி சேர்ப்பு.
-------
விடுதலைப் போராட்ட வீரரும், தலைசிறந்த
நிர்வாகி எனப் போற்றப்பட்டவருமான தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம்
(M.Bhaktavatsalam) பிறந்த தினம் இன்று.
-------
சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட
எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) மறைந்த தினம் இன்று.
-------
உலக அஞ்சல் தினம் இன்று.
சுவிட்சர்லாந்து, பெர்ன் நகரில்,
1874ம் ஆண்டு, அக்., 9ல், முதன் முதலில், சர்வதேச அஞ்சல் ஒன்றியம் துவக்கப்பட்டது.
இதை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் உலக அஞ்சல் தினம் கொண்டாடப்படுகிறது.
-------
இமாசல பிரதேசத்தின் லஹால் மற்றும் ஸ்பிடி
ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை 2.43 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
ரிக்டரில் 3.3 ஆக பதிவாகி உள்ளது.
மணிப்பூரின் காம்ஜோங் பகுதியில் இன்று அதிகாலை 3.12 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.4 ஆக பதிவாகி உள்ளது.
-------
Comments
Post a Comment