Today News செய்திகள் 21.10.2020 | NPM
Today News 21.10.2020 | NPM
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பல நாட்களாக பருவமழை பெய்து வரும் வேலையில் தேன்கனிக்கோட்டையில் தற்போது பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது.
-----
கர்நாடக அரசு உத்தரவு
இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது 4 வயது குழந்தை முதல், அனைவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்.
-----
கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண், தோட்டக்கலை இளங்கலை, பட்ட மற்றும் பட்டயப் படிப்பிற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
அனைத்து விவசாய, தோட்டக்கலை பட்ட மற்றும் பட்டய படிப்பிற்கான ஆன்லைன் கலந்தாய்வு வரும் 27ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும்.
இதற்கான விபரங்கள் இரண்டு தினங்களில் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annamalaiuniversity.ac.in) வெளியிடப்படும்.
-----
வெங்காயத்தை முழுவீச்சில் கொள்முதல் செய்து, நியாயமான விலையில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெங்காய விலையைக் குறைக்க போர்க்கால நடவடிக்கை தேவை - திமுக தலைவர் ஸ்டாலின்.
-----
திரையரங்கு உரிமையாளர்களுக்கும் சரி, OTT நிறுவனங்களுக்கும் சரி வில்லன் யார் என்றால் அது தமிழ் ராக்கர்ஸ் தான். பத்து ஆண்டுக்கும் மேலாக தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உலக சினிமாவுக்கே தண்ணி காட்டி வந்துச்சு தமிழ்ராக்கர்ஸ் (tamilrockers.com) இணையதளம்.
இதனால், அமேசான் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் நட்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இதற்கு தனியாக தொழில் நுட்ப குழு ஒன்றை அமைத்து இரவு பகலாக மூன்று மாத தீவிர முயற்சிக்கு பின்னர் இப்படியான தளங்களை அக்கு வேர், ஆணி வேராக பிச்சு எரிஞ்சுப்புட்டாய்ங்களாம்.
-----
முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழுவின் 3வது கூட்டத்தில் 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பூர், கோவை, நாமக்கல், பெரம்பலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
26 தொழில் திட்டங்கள் மூலம் ரூ.25,213 கோடி முதலீட்டில், சுமார் 49 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
-----
ஓசூர் அருகே சூளகிரியில் கண்டெய்னர் லாரி ஓட்டுனர்களை தாக்கி பல லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சென்னை பூவிருந்தவல்லியில் இருந்து செல்போன்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி மும்பை புறப்பட்டது. சூளகிரி அருகே மேலுமலை என்ற இடத்தில் ஓட்டுனர்களை தாக்கி எம்.ஐ செல்போன்களை மர்மகும்பல் திருடிச்சென்றுள்ளது.
-----
மதுரை: தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பு குறித்து 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று மதுரை விமான நிலையத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும், முதல்வருடன் நடைபெற உள்ள ஆய்வுக்கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-----
Comments
Post a Comment