Today News செய்திகள் 29.10.2020 | NPM
Today News 29.10.2020 | NPM
வெங்காயம் விளைவிப்பதற்கான விதைகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது மத்திய அரசு.
இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிப்பு.
-----
கொரோனா தொற்று:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,652 பேருக்கு தொற்று உறுதி, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,19,403 ஆக உயர்வு.
-----
மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா-அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில் அரசாணை.
மருத்துவக் கலந்தாய்வு தொடங்கப்பட வேண்டிய நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
7.5% உள் ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியீடு குறித்து ட்விட்டரில் முதல்வர் விளக்கம்.
சமூக நீதி காக்கவும், மாணவர்களின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாகவே அரசாணை வெளியீடு.
7.5% உள் ஒதுக்கீடு அரசாணை - மு.க.ஸ்டாலின் வரவேற்பு.
-----
கணக்கில் வராத ரூ.150 கோடி கண்டுபிடிப்பு:
கோயம்புத்தூர், ஈரோடு, சென்னை மற்றும் நாமக்கல்லில் கல்வி நிறுவனங்கள் நடத்தி வரும் ஒரு குழுமம் மற்றும் கட்டட ஒப்பந்ததாரர் ஒருவர் உள்பட அதனுடன் தொடர்புடையவர்களுக்குச் சொந்தமான 22 இடங்களில் நேற்று வருமான வரித் துறை சோதனை நடத்தியது
-----
ஆந்திரத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவ.2 முதல் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகள் ஒருநாள் விட்டு ஒருநாள் மற்றும் பள்ளி வேலையானது அரைநாள் மட்டுமே செயல்படும் என அறிவிப்பு.
-----
சென்னையில் பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி 60% நிரம்பியது!
-----
ரஜினிகாந்த் ட்வீட்:
சமூக வலைத்தளங்களில் பரவிவரும் அறிக்கை என்னுடைய அறிக்கை அல்ல.
ஆனால் அதில் குறிப்பிட்ட உடல்நிலை குறித்து தகவல்கள் அனைத்தும் உண்மை.
அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்குத் தெரிவிப்பேன்.
-----
வானிலை ஆய்வு மையம்:
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், தென்காசி, ராணிப்பேட்டை, விருதுநகர், நெல்லை ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக் கூடும்.
-----
please update daily in tamil. day wise updating news is superb
ReplyDeleteIt take less than a minutesminute see all the news in one short
ReplyDelete