Today News செய்திகள் 28.10.2020 | NPM

Today News 28.10.2020 | NPM

திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி, தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக முதல்வர் எடப்பாடிக்கு டுவிட்.


800 திரைப்படம் தொடர்பாக எனது கருத்தை தெரிவித்தேன்; விஜய்சேதுபதிக்கு எதிராக ட்வீட் செய்ததாக தொடர்ந்து மிரட்டல் வருகிறது. அச்சிலேற்ற முடியாத அளவுக்கு ஆபாச வார்த்தைகளால் ட்வீட் செய்கின்றனர்!

-----

2021ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு.

அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை.

-----

சென்னை பல்கலைக்கழக அரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு:

ஏப்ரல் மாதத்தில் தேர்வெழுத கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி.

மாணவர்கள் 1.2 லட்சம் பேர் தேர்ச்சி.

தமிழகத்தில் முதல் பல்கலைக்கழகமாக சென்னை பல்கலைக்கழகம் அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கியுள்ளது.

-----

பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் நவ.7-ம் தேதி விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ அறிவிப்பு.

-----

வீடியோ கான்பரன்சிங் மூலம் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

-----

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி-க்கு கொரோனா தொற்று உறுதி.


-----

நிதின் கட்கரி

தமிழகத்தில் 2 நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது.

-----

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,16,751 ஆக உயர்வு.

-----

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்:


பாஜக மகளிரணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம் - பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவிப்பு.

-----

மிலாடி நபி-யை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை (30.10.2020) சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட உத்தரவு.

-----

சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி நடத்திய ஆலோசனை நிறைவு.

தமிழகத்தில் வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் அடுத்த கட்ட தளர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

-----

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமைழையின் போது ஆண்டின் சராசரி மழை அளவில் தமிழகம் 60% மழையை பெறும். மேலும் வடகிழக்குப் பருவமைழையின் போது தமிழகத்தின் சராசரி மழை அளவு 44 செ.மீ பதிவாகும் என கூறியுள்ளனர்

-----

தமிழக ஊரக வளர்ச்சித் துறை:

ஊராட்சி மன்ற தலைவருக்கு பச்சை நிற மையினால் கையெத்திடும் அதிகாரம் இல்லை. அரசு சான்றிதழில் Attestation செய்யும் அதிகாரம் இல்லை. பச்சை நிற மையினால் கையொப்பம் செய்தால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கலாம்.

-----

ஏற்காடுக்கு மீண்டும் பேருந்து


கொரோனா ஊரடங்கால் 8 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த ஏற்காடுக்கான அரசு பேருந்து சேவை, பொதுமக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று மீண்டும் தொடக்கம்.

-----

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part I | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM