Today News செய்திகள் 07.10.2020 | NPM

தமிழ் செய்திகள் 07.10.2020

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி- அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.

2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி பெயரை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார்.

சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை அடுத்து மரியாதை.

அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களும் மரியாதை.

--------

தன்னை தீவிரவாதிகள் கொல்ல சதி செய்வதாகக் கூறி சொந்த வாகனத்தை எரித்து நாடகமாடிய இந்து அதிரடிப்படையின் பொதுச் செயலாளர் ராஜகுருவை (கோபி அருகே கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர்) போலீஸார் கைது செய்துள்ளனர்.

--------

விழுப்புரம்: செங்கோட்டை - சென்னைக்கு சென்ற தனியார் பேருந்து மயிலம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்து 15 பேர் காயம்

ஓட்டுநரின் கவனக்குறைவால் சாலையோர பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தகவல்.

--------

கொரோனாவுக்கான தடுப்பு மருந்து இவ்வருட இறுதியில் கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சுமார் 9 கொரோனா தடுப்பு மருந்துகள் இறுதி கட்ட பரிசோதனையில் இருந்து வருகின்றது- உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ்.

கொரோனாவுக்கு உலக அளவில் 10,53,925 பேர் பலி!

--------

ஸ்ரீபெரும்புதூர்: வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

--------

சுப்ரீம் கோர்ட்டு கவலை:

அரசியல் நெருக்கடியால் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை. 

--------

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இன்று இரவு 7:30 மணிக்கு பலப்பரீட்சை

--------

கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபுவின் மனைவி சௌந்தர்யா


தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் நான் முழு சம்மதத்துடன் நான் காதலித்தவரை திருமணம் செய்து கொண்டேன் என்றும் என்னுடைய முழு சம்மதத்துடன்தான்  திருமணம் நடந்தது என்றும் என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் விளக்கி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

--------

சென்னையில் விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95 க்கும் விற்பனை.

--------

தேமுதிக தலைவர் விஜயகாந்த், 2-ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி.

விஜயகாந்த் நலமுடன் உள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் - தேமுதிக.

--------

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part I | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM