Today News செய்திகள் 13.10.2020 | NPM
Today News 13.10.2020 | NPM
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் (வயது 93) உடல்நலக் குறைவால் சேலம் தனியார் மருத்துவமனையில் காலமானார்!
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை, ஜி.கே.வாசன் இரங்கல், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இரங்கல்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாளின் உடல் தகனம் செய்யப்பட்டது.
-----
சிவகங்கை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் விபத்தில் காலமானார்.
-----
திருப்பதி எழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவம் நான்கு மாட வீதி உலா வருவது ரத்து; தேவஸ்தானம் அறிவிப்பு
-----
இன்று காக்கிநாடாவில் கரையை கடக்கிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தமிழகத்தில் ஐந்து மாவடடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தகவல்.
-----
இமாச்சல பிரதேச முதலமைச்சருக்கு கொரோனா..
இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
-----
வங்க தேசத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை...! அவசர சட்டம் இன்று முதல் அமலாகிறது.
இதையடுத்து இந்த சட்ட மசோதாவுக்கு வங்கதேச அதிபர் அப்துல் ஹமித் ஒப்புதலுக்குப் பின் இன்று அமலாகிறது.
-----
நாடு முழுவதும் நான்கே மாதங்களில் 18 ஆயிரம் டன் கொரோனா கழிவுகள்
- மத்திய அரசு.
-----
மேட்டுப்பாளையம், கும்பகோணம் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை:
கும்பகோணம் பதிவாளர் அலுவலக லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் ரூ.2.37 லட்சம் பறிமுதல்.
மேட்டுப்பாளையம் சார் பாதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2.14 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
-----
இங்கிலாந்தில் மீண்டும் கோரத்தாண்டவமாடும் கொரோனா.
மூன்றடுக்கு ஊரடங்கு அமல்.
-----
சென்னையில் திமுகவின் செயற்குழு உறுப்பினர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு.
கே.கே நகர் அலுவலகத்தில் இருந்த போது மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர்.
-----
பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் - தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்.
-----
Comments
Post a Comment