Today News செய்திகள் 02.10.2020 | NPM

 செய்திகள் 02.10.2020

கிராமசபை கூட்டம்

அனைத்து கிராம ஊராட்சிகளில் இன்று நடக்கவிருந்த கிராமசபை கூட்டம் ரத்து . கொரோனா தொற்று பரவல் காரணமாக கூட்டம் ரத்து  செய்யப்பட்டிருப்பதாக தகவல்.

----

கிராம சபை கூட்டத்தை ஏன் நடத்தவில்லை என்று அனைவரும் புகார் செய்யவும்.

புகார் செய்ய வேண்டிய எண் :

1100

----

கள்ளக்குறிச்சி மாவட்டம்

அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த பிரேதத்தை எலிகள் கடித்து குதறியதால் பரபரப்பு.

----

ஹத்ராஸ் கொடூர சம்பவம் குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.

.பி. அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

----

இன்று - பெருந்தலைவர் காமராஜர் மறைந்த தினம்.

இன்று - ரவி வர்மா - உலகப் புகழ் பெற்ற இந்திய ஓவியர் மறைந்த நாள்.

----

இந்திய (முன்னாள்) இரண்டாம் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் இன்று.




மகாத்மா காந்தியின் பிறந்த நாள்:

மகாத்மா காந்தியின் 151வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை.

----

சர்வதேச அகிம்சை தினம் (International Non-Violence Day)

இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2,  சர்வதேச அகிம்சை தினமாக உலகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

----

தம்முடன் நெருக்கமான ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தானும், தனது மனைவியும் சுயதனிமைப்படுத்தலில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு.

----

சீனா-வில் சுற்றுலா தளத்தில் ஏற்பட்ட  பயங்கர தீ விபத்தில் 13 பேர் பலி.

ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் நகரின் தீம் பூங்காவில் தீ விபத்து.

பனி சிற்பங்களின் கண்காட்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் வரை படுகாயம்.

----

Comments

Popular posts from this blog

Tamil News Live 17 January 2025: தமிழ்நாட்டில் சென்னையில் இரவு நேர கார் பந்தயம் - முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி | NPM

Tamil News Live 30 January 2025 : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு | NPM

Tamil News Live 21 February 2025 : எந்த மொழியையும் திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை ! தர்மேந்திர பிரதான்-ஸ்டாலின்