Today News செய்திகள் 11.10.2020 | NPM

Today News 11.10.2020 | NPM

ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசாவில் பரவலாக கனமழை இருக்கும்: இந்திய வானிலை மையம்

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..!


அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுவடைந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆந்திர நோக்கி நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

-------

ஐபிஎல் இன்றைய போட்டிகள்: ராஜஸ்தான் VS ஹைதராபாத் - மும்பை VS டெல்லி.!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இரண்டாவது போட்டியில் மும்பை அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன.

-------

திருச்சி: திருச்சி தில்லை நகரில் 10 பைசாவுக்கு பிரியாணி வாங்க பொதுமக்கள் குவிந்தனர்

10 பைசா பிரியாணி வாங்க ஏராளமான மக்கள் குவிந்ததால் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. 10 மணி முதல் டோக்கன் பெற்று பிரியாணி வாங்கலாம் என கடை அறிவித்து இருந்தது.

-------

பீகாரில் பாட்னா ரெயில்வே நிலையத்தில் 18 கிலோ தங்கம் பறிமுதல்; ஒருவர் கைது.

-------

பராமரிப்பு பணி: சென்னை சென்டிரல்-கோவை சிறப்பு ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு.

நாளை (திங்கட்கிழமை) மற்றும் வருகிற 14-ந் தேதியில் கீழ்க்கண்ட சிறப்பு ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-கோவை (வண்டி எண்: 02679) இடையே இயக்கப்பட்டு வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் நாளை மற்றும் 14-ந் தேதி மதியம் 2.30 மணிக்கு பதிலாக, மாலை 4 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

மறுமார்க்கமாக கோவை-சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் (02676) இடையே இயக்கப்பட்டு வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் நாளை மற்றும் 14-ந் தேதி மதியம் 3.15 மணிக்கு பதிலாக மதியம் 3.35 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

-------

சென்னை : பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

-------

அ.தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள், வேலைவாய்ப்பு குறித்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

-------

உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் 3,74,50,148 பேர் பாதிப்பு.

உலகில் கொரோனா தொற்றால் இதுவரை  10,77,218 பேர் மரணம்.

உலகில் கொரோனா தொற்றில் இருந்து 2,80,97,823 பேர் மீண்டனர்.

உலகில் கொரோனா பாதிப்புடன் 82,75,107 பேர் சிகிச்சை பெற்று.

-------

உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது ஆந்திர முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு..!


ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா கட்டுப்படுத்துவதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-------

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே கட்டுமேடு ஆதிரங்கம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

-------

உசிலம்பட்டி சூப்பர் மார்க்கெட்டில் திருடிய பிறகுஎனக்கு பசிக்கிறது, மன்னித்துவிடுங்கள். உங்களின் ஒரு நாள் வருவாய், என் 3மாத வருவாய்க்கு சமம்என கடிதம் எழுதிவைத்துள்ளார்.

-------

அக்டோபர் – 11 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் (International Day of the Girl Child)

பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள் ( International Day of the Girl Child, Day of the Girl , International Day of the Girl ) என்பது ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த ஒரு பன்னாட்டு நினைவு நாள் ஆகும்.

பெண் குழந்தைகளுக்கான உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்த அக்டோபர் 11 ஆம் நாளை பன்னாட்டு பெண் குழந்தைகள் தினமாக ஐநா 2011 ஆம் ஆண்டில் அறிவித்தது.

-------

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கோரோனா பாதிப்புக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை முடிவடைந்ததாகவும் 10-ம் தேதி முதல் அவர் தனது அரசு பணிகளை மீண்டும் தொடங்குவார் என்றும் வெள்ளை மாளிகை தலைமை மருத்துவர் சீன் கான்லி தெரிவித்தார்.


இதனிடையே, அதிபர் டிரம்ப்  வெள்ளை மாளிகையில் உள்ள பால்கனியில் இருந்து தனது ஆதரவாளர்களை நோக்கி நேற்று  கை அசைத்தார். பின்னர் பேசிய அவர் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி என தெரிவித்தார்.

-------

தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி இல்லை. அதிமுக தலைமையில்தான் கூட்டணி உள்ளது.

2021ல் தமிழகத்தில் ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சியாக பாஜக இருக்கும்பொன்.ராதாகிருஷ்ணன்.

-------

விவசாயிகளுக்கு சொத்து அட்டைகள்- புதிய திட்டத்தை துவக்கி வைத்தார் மோடி.


முதல் கட்டமாக உத்தர பிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் கர்நாடகம் ஆகிய 6 மாநில விவசாயிகளுக்கு சொத்து அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் அட்டையில் குறிப்பிடப்படும் சொத்துக்களைப் பயன்படுத்தி கடன் பெறுவதற்கு இந்த அட்டை உதவும்.

-------

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part I | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM