You Can Check the Name of the Deed on the Website - வில்லங்கச் சான்றிதழ்
You Can Check the Name of the Deed on the Website பத்திரம் யார் பெயரில் இருக்கிறது என இணையதளத்திளேயே பார்க்கலாம். ஒருவரின் பத்திரம் உண்மையானது தானா? அது அவர்களின் பெயரில் தான் இருக்கிறதா? என பார்ப்பதற்கு இனி கண்டபடி அலைய தேவையில்லை. வீட்டில் அமர்ந்த படியே இணையதளத்தில் பார்க்கலாம். வில்லங்கச் சான்றிதழ் : “ வில்லங்கச் சான்றிதழ் ” என்றால் நம்மாள் எதோ வில்லங்கம் ( பிரச்சனை ) போலிருக்கு என ஒதுங்கி கொள்கின்றனர் இக்காலத்து இளைஞர்கள். ஆங்கிலத்தில் : Encumbrance Certificate தமிழில் : வில்லங்கச் சான்றிதழ் நிலம் யார் பெயரில் இருந்தது? எவ்வாறு மாறி வந்தது எந்த வருடம் மாறி வந்தது? அது போன்ற அத்தனை விவரங்களை இந்த வில்லங்கச் சான்றிதழ் என்று சொல்லக்கூடிய ஈ.சி. சொல்லிவிடும். ஈ.சி என்பது பத்திரப்பதிவு அலுவலகத்தின் ஒரு அங்கம் ( இது தெரியாமல் ஈ.சி. போடனும் என பத்திரப்பதிவு அலுவலகர்களிடம் போய் சிலர் கேட்பார்கள் ) ஒரு நிலத்தின் உண்மை தன்மை அறிய இது உதவும். இப்போது இணையதளத்திலேயே இதை காண இயலும் . தேவையானால் பிரதியும் (Xerox) எடுத்துக்கொள்ளலாம்