Posts

Showing posts from March, 2021

அகரம் அறக்கட்டளை வழங்கும் “அகரம் விதைத் திட்டம்”

Image
தகுதியுள்ள 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு ! அகரம் அறக்கட்டளை வழங்கும் “அகரம் விதைத் திட்டம்” பள்ளிக்கல்வி - அகரம் பவுண்டேஷன் 2020-2021 ஆம் ஆண்டு ஆம் கல்வியாண்டு அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்கள் அகரம் கல்வி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பித்த அனுமதி வேண்டி கடிதம் பெறப்பட்டுள்ளது. அனுமதி ஆணை வழங்குதல் தொடர்பாக. பார்வை: சென்னை 17 அகரம் அறக்கட்டளையில் இருந்து பெறப்பட்ட கடிதம் நாள் 09.03.2021. பார்வையில் காணும் கடிதத்தில் அகரம் அறக்கட்டளை நிறுவனம் “அகரம் விதை திட்டம் 2021” எனும் திட்டத்தினை இக்கல்வி ஆண்டில் செயல்படுத்தும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியரின் படித்து முன்னேற வேண்டும் என்ற கனவோடு இருக்கும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், பெற்றோரை இழந்து வறுமையில் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு கல்வி இணை செயல்பாடுகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் சிறப்பிடம் பெற்றவர்கள், கணிதம் மற்றும் அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்த திறன

சட்டமன்ற தேர்தல்கள் குறித்த இன்றைய தகவல்கள் Assembly Elections News 2021 | NPM

Image
Assembly Elections News 2021 | NPM கரூர் தொகுதி: தமிழகத்திலேயே கரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 97 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்திலேயே குறைந்தபட்சமாக கந்தர்வகோட்டை தொகுதியில் 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ***** ஆவடி தொகுதி சென்னை ஆவடி சட்டமன்ற தொகுதியில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் இந்தி மொழியில் துண்டு பிரசுரம் அச்சடித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ***** கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்து உள்ளார். கள்ளக்குறிச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சி தனி தொகுதி வேட்பாளர் செந்தில் குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்து உள்ளார் அப்போது அவர் கூறுகையில் ஸ்டாலின் அவர்களுக்கு விவசாயத்தைப் பத்தி என்ன தெரியும் அவர் விவசாயத்தைப் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை என குற்றம்சாட்டினார் அடுத்ததாக ஸ்டாலின் அவர்களுக்கு பதவி ஆசை மட்டுமே தான் முக்கியம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எப்படி கொள்ளை அடிக்கலாம் என்ற எண்

சட்டமன்ற தேர்தல்கள் குறித்த இன்றைய தகவல்கள் Assembly Elections News 2021 | NPM

Image
சட்டமன்ற தேர்தல்கள் குறித்த இன்றைய தகவல்கள் Assembly Elections News 2021 | NPM சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு இந்த தேர்தலில் போட்டியிடவில்லை - சரத்குமார் அறிவிப்பு ***** அம்பாசமுத்திரம் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மனுதாக்கல் செய்தார். ***** திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா வேட்புமனு தாக்கல் செய்தார். ***** திமுகவில் இருந்து விலகிய சரவணன் மனப்பக்குவம் இல்லாதவர். - திமுக வேட்பாளர் மூர்த்தி ***** நான் வேறு கட்சிக்கு மாறவிருப்பதாக பரவும் செய்திகள் உண்மையில்லை என தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி விளக்கம் அளித்துள்ளார். விளவங்கோடு தொகுதி மக்களுக்காக சட்டசபையில் குரல் கொடுத்துள்ளேன். விளவங்கோடு தொகுதியில் போட்டியிட எனக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என நம்புகிறேன் எனவும் கூறினார். ***** அமமுக கூட்டணியில் உள்ள ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் 3 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு. 1.     வாணியம்பாடி – வக்கீல் அஹமத் 2.     சங்கராபுரம் – மு

சட்டமன்ற தேர்தல்கள் குறித்த இன்றைய தகவல்கள் Assembly Elections News 2021 | NPM

Image
Assembly Elections News 2021 | NPM அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி -க்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு. லால்குடி, பட்டுக்கோட்டை, திரு.வி.க.நகர், கிள்ளியூர், ஈரோடு கிழக்கு, தூத்துக்குடி. இதில் அதிமுக லால்குடி தொகுதிக்கு ராஜாராம் என்பவரை வேட்பாளராக அறிவித்திருந்த நிலையில் அந்த தொகுதி தற்போது த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. த.மா.கா. 6 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும். - ஜி.கே.வாசன். ***** திமுகவின் வேட்பாளர் பட்டியல் ஒரே கட்டமாக நாளை வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியாகவிருந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நிடித்து வருவதால் தாமதம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், திமுக வேட்பாளர்களின் பட்டியல் நாளை ஒரே கட்டமாக வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும், திமுகவின் தேர்தல் அறிக்கை நாளை மறுநாள்(சனிக்கிழமை) வெளியாகவுள்ளது. ***** திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் பட்

வித்தியாசமான மகளிர் தின வாழ்த்துகள்! டிடி. Women's Day Special DD

Image
உலக மகளிர் தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளரும் நடிகையுமான டி.டி என்கிற விஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி, சமூகவலைத் தளங்களில் மகளிர் தின வாழ்த்து தொடர்பாக காணொளி ஒன்றை வெளியிட்டு  இருக்கார். மாஸ்டர் குட்டி ஸ்டோரி பாடலின் பின்னணியில் தன்னுடைய சொந்த வாழ்க்கையின் நிலைகளை வெளிப்படுத்தும் வெவ்வேறு அட்டைகளைக் காண்பித்தபடி காணொளியில் அவர் இடம்பெற்றிருந்தார். அந்த அட்டைகளில் கூறப்பட்டிருந்தது.   இவைதான்: அவரின் உலக மகளிர் தின கொண்டாட்டங்கள் 36 + சிங்கிள், 36 + விவகாரத்தானவர், 36 + (இன்னும்) குழந்தையில்லை, 36 + முடக்குவாதம் ஆனால், 36 + மகிழ்ச்சியாக உள்ளேன். ஏனெனில் ஒவ்வொருவருடைய நேரக்கோடும் (வாழ்க்கை) வித்தியாசம். எனவே உங்களுடைய நேரக்கோட்டை அனுபவியுங்கள். மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுங்கள்! மகளிர் தின வாழ்த்துகள்! மேலும், “எல்லோருடைய வாழ்க்கையும் வித்தியாசமானது உங்கள் காலவரிசையை அனுபவியுங்கள்  சமூகத்தின் காலவரிசை உங்களைத் தோல்வியாகத் தீர்மானிக்க அனுமதிக்காதீர்கள் …  இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்”   என்றும் குறிப்பிட்டுஉள்ளார். பெண்கள் எடுத்துக்கொண்ட வலி

சட்டமன்ற தேர்தல்கள் குறித்த இன்றைய தகவல்கள் Assembly Elections News 2021 | NPM

Image
Assembly Elections Information 2021 | NPM தேர்தல்கள் குறித்த இன்றைய தகவல்கள் Assembly Elections News 2021. ADMK: சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றுவருகிறது. அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்த 8,240 பேருக்கும் இன்று ஒரே நாளில் நேர்காணல் நடைபெறுகிறது. ***** DMK: சென்னை அண்ணா அறிவாலயத்தில் 3-வது நாளாக திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது. சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், ஸ்டாலின் தலைமையில் நேர்காணல். ***** கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை. கொ.ம.தே.க சார்பில் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், துணை பொதுச்செயலாளர்கள் சக்திகோச் உள்ளிட்டோர் பங்கேற்பு. தலைமை நிலையச்செயலாளர் சுரேஷ் பொன்னுவேல், சூரிய