அகரம் அறக்கட்டளை வழங்கும் “அகரம் விதைத் திட்டம்”

தகுதியுள்ள 12ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

அகரம் அறக்கட்டளை வழங்கும் “அகரம் விதைத் திட்டம்”



பள்ளிக்கல்வி - அகரம் பவுண்டேஷன் 2020-2021 ஆம் ஆண்டு ஆம் கல்வியாண்டு அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்கள் அகரம் கல்வி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பித்த அனுமதி வேண்டி கடிதம் பெறப்பட்டுள்ளது. அனுமதி ஆணை வழங்குதல் தொடர்பாக.

பார்வை: சென்னை 17 அகரம் அறக்கட்டளையில் இருந்து பெறப்பட்ட கடிதம் நாள் 09.03.2021.

பார்வையில் காணும் கடிதத்தில் அகரம் அறக்கட்டளை நிறுவனம் “அகரம் விதை திட்டம் 2021” எனும் திட்டத்தினை இக்கல்வி ஆண்டில் செயல்படுத்தும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியரின் படித்து முன்னேற வேண்டும் என்ற கனவோடு இருக்கும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், பெற்றோரை இழந்து வறுமையில் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு கல்வி இணை செயல்பாடுகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் சிறப்பிடம் பெற்றவர்கள், கணிதம் மற்றும் அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்த திறன் பெற்ற மாணவர்கள் என தேர்ந்தெடுத்து திட்டத்திற்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மேற்படி அகரம் விதை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஏதுவாக சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் பாதிக்காத வகையில் சார்ந்த நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

“இப்படிக்கு பள்ளிக்கல்வி இயக்குனர்”.

Click to Download Notification Here

அகரம் விதை திட்டம்.

மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கு!

அகரம் அறக்கட்டளை வணக்கங்கள்!

கிராமங்களில் எளிய மனிதர்களின் நம்பிக்கை அரசு பள்ளிகளும் ஆசிரியர்களும், மாணவர்களை தினசரி சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே. ஆதலால், தங்களின் உதவியை நாடுகிறோம். 2020-2021 ஆம் ஆண்டு ஆம் கல்வியாண்டில் பிளஸ் டூ மாணவர்களில் முதல் தலைமுறை மாணவர்கள், பொருளாதார மற்றும் சமூக சூழலில் பின்தங்கிய மாணவர்களை தேர்ந்தெடுத்து மாணவர் கைப்பட எழுதிய குடும்ப சூழ்நிலை கடிதத்துடன் விதைத்திட விண்ணப்பப்படிவத்தை (இணைப்பில் உள்ளது) நகலெடுத்து பூர்த்தி செய்து தேவைப்படும் சான்றிதழ் நகல்கள் சேர்த்து விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

“இப்படிக்கு அகரம் அறக்கட்டளை”.

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part I | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM