சட்டமன்ற தேர்தல்கள் குறித்த இன்றைய தகவல்கள் Assembly Elections News 2021 | NPM
சட்டமன்ற தேர்தல்கள் குறித்த இன்றைய தகவல்கள் Assembly Elections News 2021 | NPM
சமத்துவ மக்கள் கட்சியின்
வேட்பாளர் பட்டியல் வெளியீடு இந்த தேர்தலில் போட்டியிடவில்லை
- சரத்குமார் அறிவிப்பு
*****
அம்பாசமுத்திரம் தொகுதியில்
திமுக சார்பாக போட்டியிட முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மனுதாக்கல் செய்தார்.
*****
திருநெல்வேலி சட்டமன்ற
தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா வேட்புமனு தாக்கல் செய்தார்.
*****
திமுகவில் இருந்து விலகிய
சரவணன் மனப்பக்குவம் இல்லாதவர்.
- திமுக வேட்பாளர் மூர்த்தி
*****
நான் வேறு கட்சிக்கு மாறவிருப்பதாக
பரவும் செய்திகள் உண்மையில்லை என தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ்
எம்எல்ஏ விஜயதாரணி விளக்கம் அளித்துள்ளார். விளவங்கோடு தொகுதி மக்களுக்காக சட்டசபையில்
குரல் கொடுத்துள்ளேன். விளவங்கோடு தொகுதியில் போட்டியிட எனக்கும் மீண்டும் வாய்ப்பு
அளிக்கப்படும் என நம்புகிறேன் எனவும் கூறினார்.
*****
அமமுக கூட்டணியில் உள்ள
ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் 3 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.
1.
வாணியம்பாடி –
வக்கீல் அஹமத்
2.
சங்கராபுரம் –
முஜிபுர் ரஹமான்
3.
கிருஷ்ணகிரி –அமீனுல்லா
*****
சீமான் தனது வேட்பு மனுவில்
தமக்கு அசையும் சொத்து ரூ.31,06,500 அப்படீன்னும் அசையா சொத்துக்கள் ஏதுமில்லை எனவும்
தெரிவிச்சிருக்கார். கூடவே தன் மனைவிக்கு அசையும் சொத்து ரூ.63,25,031 மற்றும் அசையா
சொத்து ரூ.25,30,000 உள்ளதாகம் அவர் குறிப்பிட்டிருக்கார்.
*****
கமல்ஹாசன் தாக்கல் செய்த
வேட்பு மனுவில், 45 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், 178 கோடி ரூபாய் மதிப்பிலான
அசையா சொத்துகளும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தனக்கு கடனாக 50 கோடி ரூபாய்
இருப்பதாகவும் தெரிவிச்சிருக்கார்.
*****
உதயநிதி ஸ்டாலினின் சொத்து
மதிப்பு ரூ. 28.82 கோடி என தகவல் வெளியாகி இருக்குது.
மொத்த அசையும் சொத்து மதிப்பு
22.28 கோடி மதிப்பு. அசையா சொத்து மதிப்பு ரூ. 5.37 கோடி.
*****
ஸ்டாலின் மறுபடியும் கொளத்தூர்
தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செஞ்சார். வேட்புமனுவில் தனது அசையும்,
அசையா சொத்து விவரத்தை வெளியிட்டுள்ளார்.
*****
ஒ. பன்னீர்செல்வத்தின்
சொத்து மதிப்பு கடந்த அஞ்சு வருஷத்தில் பல மடங்கு உயர்ந்திருக்கு. போடி தொகுதியில்
போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அவரது அசையும் சொத்து 2016ல் ரூ.55 லட்சமாக இருந்தது.
தற்போது ரூ.5.19 கோடியாக உள்ளது. அதேபோல், 2016ல் ரூ.98 லட்சமாக இருந்த அசையா சொத்தின்
மதிப்பு இப்போது ரூ.2.64 கோடியாக அதிகரிச்சிருக்குது.
*****
முதல்வர் பழனிசாமி இன்னிக்கு
சேலம் டிஸ்சார்ஜ் எடப்பாடி கலெக்டர் ஆபீசில் தன்னோட வேட்புமனுவை தாக்கல் செஞ்சார்.
அந்த வேட்புமனுவில் 2016-ல் ரூ.3.14 கோடியாக இருந்த அசையும் சொத்து, 2021ல் ரூ.2.01
கோடியாக குறைந்துள்ளது எனவும், அதேபோல், 2016-ல் ரூ.4.66 கோடியாக இருந்த அசையா சொத்து
2021ல் ரூ. 4.68 கோடியாக உள்ளது. மேலும், 2016-ல் ரூ.33 லட்சமாக இருந்த கடன் தற்போது
ரூ.29.75 லட்சமாக குறைந்துள்ளதாக சொல்லி இருக்கார்
*****
அம்மா மக்கள் முன்னேற்றக்
கழக சங்கரன்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதி
வேட்பாளர் அறிவிப்பு மற்றும் கிள்ளியூர் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் மாற்றம்.
*****
சென்னை கிழக்கு கடற்கரை
சாலையில் ஆவணங்கள் இன்றி கொண்டுசென்ற ரூ.2 கோடி பறிமுதல்.
*****
அம்பாசமுத்திரம் தொகுதியில்
திமுக சார்பாக போட்டியிட முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மனுதாக்கல் செய்தார்.
*****
எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர்
பிரச்சாரத்துக்கு விதிகளை மீறி ஆள் சேர்ப்பு எனப் புகார்!
*****
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில்
திமுக வேட்பாளர் மா. சுப்பிரமணியன் வாக்கு சேகரிப்பு!
நெருப்பு மேடு, செட்டி
தோட்டம் உள்ளிட்ட இடங்களில் ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பு!
*****
Comments
Post a Comment