சட்டமன்ற தேர்தல்கள் குறித்த இன்றைய தகவல்கள் Assembly Elections News 2021 | NPM
Assembly Elections Information 2021 | NPM
ADMK:
சென்னை,
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது.
சட்டப்பேரவை
தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல்
முதலமைச்சர்
பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றுவருகிறது.
அதிமுக
சார்பில் விருப்ப மனு அளித்த 8,240 பேருக்கும் இன்று ஒரே நாளில் நேர்காணல் நடைபெறுகிறது.
*****
DMK:
சென்னை
அண்ணா அறிவாலயத்தில் 3-வது நாளாக திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது.
சட்டப்பேரவை
தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், ஸ்டாலின் தலைமையில்
நேர்காணல்.
*****
கொங்குநாடு
மக்கள் தேசிய கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை தொடங்கியது.
சென்னை
அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.
கொ.ம.தே.க
சார்பில் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், துணை பொதுச்செயலாளர்கள் சக்திகோச் உள்ளிட்டோர்
பங்கேற்பு.
தலைமை
நிலையச்செயலாளர் சுரேஷ் பொன்னுவேல், சூரிய மூர்த்தி பங்கேற்பு.
*****
மாவட்ட கல்வித்துறை
அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை தகவல்:
"வாக்கு
எண்ணிக்கை பணியில் ஆசிரியர்கள் பங்கு பெரிய அளவில் இல்லை"
"வாக்கு
எண்ணிக்கை நடைபெறும் மையங்களிலும் பிரச்சினை இல்லை"
"கல்லூரிகளில்
வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் தேர்வு மையங்களுக்கு பாதிப்பு இல்லை"
*****
சட்டசபை
தேர்தலை புறக்கணிக்கிறது காந்திய மக்கள் இயக்கம்
தேர்தலை
புறக்கணிப்பதாக தமிழருவி மணியன் அறிவிப்பு.
*****
அரசியலை
விட்டு சசிகலா விலகியதற்குக் காரணம் டிடிவி தினகரன் தான்.
டிடிவி
தினகரனின் அடாவடி நடவடிக்கைதான் இதற்குக் காரணம்.
சசிகலா
எடுத்தது நல்ல முடிவுதான்.
சசிகலாவிற்கு
வயதாகி விட்டது உடல் நல பாதிப்பினால் இந்த முடிவு எடுத்திருக்கலாம் - திவாகரன்.
*****
தேமுதிக
சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனுவை அளித்தார் பிரேமலதா விஜயகாந்த்.
தொகுதியின்
பெயரை குறிப்பிடாமல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்பமனுவை வழங்கினார் பிரேமலதா.
*****
திமுக கூட்டணியில் விசிகவுக்கு
6 தொகுதிகள் ஒதுக்கீடு:
சென்னை
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் இறுதியில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்
ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழகத்தின்
நலன் கருதி 6 தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம்.
வாக்குகள்
சிதறினால் பாஜகவின் திட்டம் வென்றுவிடும்.
கூட்டணியை
உடைப்பதில் பா.ஜ.க கைதேர்ந்தது - அண்ணா அறிவாலயத்தில் திருமாவளவன் பேட்டி.
*****
தமிழகம்
முழுவதும் இதுவரை ரூ.11 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல். தேர்தல்
நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் பணம் பறிமுதல்.
*****
திமுகவுடன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை. தொகுதி பங்கீடு
குழுவினருடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முத்தரசன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை.
*****
தேமுதிக
சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தார், விஜயகாந்தின் மூத்த மகன்
விஜய பிரபாகரன். தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் விருப்பமனு அளித்ததாக பேட்டி.
*****
சட்டப்பேரவை
தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுக - மதிமுக மீண்டும் பேச்சுவார்த்தை. மதிமுக சார்பில்
மல்லை சத்யா, செந்திலதிபன், சின்னப்பா உள்ளிட்டோர் பங்கேற்பு.
*****
தமிழகத்தில்
ராகுல்காந்தி பரப்புரை செய்ய தடைவிதிக்கக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு தமிழக பாஜக தலைவர்
எல்.முருகன் கடிதம்
*****
நாம்
தமிழர் கட்சியில் இருந்து சாட்டை துரைமுருகன் நீக்கப்பட்டார்.
*****
தேர்தலில்
போட்டியிட விரும்பும் அ.தி.மு.க வேட்பாளர்களுடனான நேர்காணல் நிறைவடைந்ததாக அறிவிப்பு.
கடைசியாக
திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த 760 பேரை ஓ.பி.எஸ்,
இ.பி.எஸ் மற்றும் 5 நிர்வாகிகள் நேரில் சந்தித்து வழியனுப்பி வைத்தார்கள்.
இன்று
ஒரே நாளில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை
8 ஆயிரத்து 300 பேரை பார்த்தார்கள்.
*****
Comments
Post a Comment