சட்டமன்ற தேர்தல்கள் குறித்த இன்றைய தகவல்கள் Assembly Elections News 2021 | NPM

Assembly Elections News 2021 | NPM

கரூர் தொகுதி:

தமிழகத்திலேயே கரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 97 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்திலேயே குறைந்தபட்சமாக கந்தர்வகோட்டை தொகுதியில் 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

*****

ஆவடி தொகுதி

சென்னை ஆவடி சட்டமன்ற தொகுதியில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் இந்தி மொழியில் துண்டு பிரசுரம் அச்சடித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

*****

கள்ளக்குறிச்சி தொகுதி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்து உள்ளார்.



கள்ளக்குறிச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சி தனி தொகுதி வேட்பாளர் செந்தில் குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்து உள்ளார் அப்போது அவர் கூறுகையில் ஸ்டாலின் அவர்களுக்கு விவசாயத்தைப் பத்தி என்ன தெரியும் அவர் விவசாயத்தைப் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை என குற்றம்சாட்டினார் அடுத்ததாக ஸ்டாலின் அவர்களுக்கு பதவி ஆசை மட்டுமே தான் முக்கியம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எப்படி கொள்ளை அடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார் இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

*****

நெல்லை தொகுதி

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் திமுக வேட்பாளர் லட்சுமணன் ஆகியோர் வேட்பு மனுக்கள் ஏற்பு. 

நெல்லை சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர்களில் அமமுக வேட்பாளர் பாலகிருஷ்ணன் என்ற பால் கண்ணன் வேட்புமனுவும் சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் அழகேசன் என்பவரின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டன.  அமமுக சார்பில் மாற்று வேட்பாளர் மகேஷ் கண்ணன் என்பவர் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

நெல்லை சட்டமன்ற தொகுதியில் 40 பேர் வேட்புமனு தாக்கல் செய்யததில் 16 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. சமத்துவ மக்கள் கட்சி பனங்காட்டு படை உள்ளிட்ட 24 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

*****

அரவக்குறிச்சி தொகுதி

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனு நிறுத்தி வைப்பு

*****

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியின் SDPI கட்சி வேட்பாளர் V.M.S முகம்மது முபாரக் அவர்களின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

*****

எடப்பாடி தொகுதி

சேலம், எடப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளரான முதலமைச்சர் பழனிசாமி வேட்பு மனு ஏற்பு.

*****

போடிநாயக்கனூர் தொகுதி

போடிநாயக்கனூர் தொகுதி அதிமுக வேட்பாளரான துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வேட்பு மனு ஏற்பு.

*****

கொளத்தூர் தொகுதி

சென்னை, கொளத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஸ்டாலினின் வேட்பு மனு ஏற்பு.

*****

கோவில்பட்டி தொகுதி

கோவில்பட்டி தொகுதி அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் மனு ஏற்பு.

*****

தாராபுரம்(தனி) தொகுதி

தாராபுரம்(தனி) தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் வேட்புமனு ஏற்பு.

*****

கோவை தெற்கு தொகுதி

கோவை தெற்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசன் வேட்பு மனு ஏற்பு.

*****

ராமநாதபுரம் தொகுதி

மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டபேரவை தொகுதியில் ராமநாதபுரம் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் திருவாடானை சட்டப் போவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கருமாணிக்கம் பரமக்குடி (தனி) தொகுதி திமுக வேட்பாளர் செ.முருகேசன், முதுகுளத்தூர் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்பு.

*****

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நன்நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள காவலன் கேட் அருகில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாசகங்கள் அடங்கிய மாபெரும் சுவரொட்டிகள் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் அலுவலருக்கு புகார் வந்தது. இதையடுத்து தேர்தல் அலுவலர் உத்தரவின் பேரில் பறக்கும்படை குழுவினர், ஓட்டபட்ட சுவரொட்டிகளை கிழிக்கும் பணியில் காஞ்சிபுரம் பெருநகராட்சி ஊழியர்களை ஈடுபடுத்தி பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அனைத்தையும் அழித்தனர்.

இதுகுறித்து அதிமுக தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த சிலர் தாங்கள் சுவரொட்டிகளை ஒட்ட சென்னை தலைமை அலுவலகம் சார்பாக அனுமதி பெற்றுள்ளதாகவும் அழிக்க வேண்டாம் எனக் கூறினர். ஆனால் தேர்தல் அலுவலர் அறிவுரையின்படி சுவரொட்டிகள் அனைத்தும் கிழிக்கப்பட்டது.

*****

Comments

Popular posts from this blog

Tamil News Live 15 August 2024: தமிழ்நாட்டில் 78வது சுதந்திர தின விழா - தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | NPM

Tamil News Live 17 January 2025: தமிழ்நாட்டில் சென்னையில் இரவு நேர கார் பந்தயம் - முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி | NPM

Tamil News Live 30 January 2025 : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு | NPM