Posts

Showing posts from October, 2020

Today News செய்திகள் 30.10.2020 | NPM

Image
 Today News 30.10.2020 | NPM துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து உருவான சுனாமி: ஏகன் நகருக்குள் கடல்நீர் புகுந்ததால் பரபரப்பு. ரிக்டர் அளவில் 7 ஆகப் பதிவான பயங்கர நிலநடுக்கம் - இடிந்து விழுந்த கட்டடங்கள். கிரீஸ் நாட்டின் சமோஸ் தீவின் அருகே கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பல்கேரியா, கிரீஸ், வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம். ----- தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,22,011 ஆக உயர்வு. சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 723 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,99,173 ஆக அதிகரிப்பு. தமிழகத்தில் மேலும் 38 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 11,091 ஆக உயர்வு. தமிழகத்தில் ஒரே நாளில் 3,924 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 6,87,388 பேர் குணமடைந்துள்ளனர். ----- 7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக முதலமைச்சர் நன்றி தெரிவித்தார். மருத்துவ ப

Today News செய்திகள் 29.10.2020 | NPM

Image
 Today News 29.10.2020 | NPM வெங்காயம் விளைவிப்பதற்கான விதைகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது மத்திய அரசு. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிப்பு. ----- கொரோனா தொற்று: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,652 பேருக்கு தொற்று உறுதி, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,19,403 ஆக உயர்வு. ----- மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா-அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில் அரசாணை. மருத்துவக் கலந்தாய்வு தொடங்கப்பட வேண்டிய நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 7.5% உள் ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியீடு குறித்து ட்விட்டரில் முதல்வர் விளக்கம். சமூக நீதி காக்கவும், மாணவர்களின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாகவே அரசாணை வெளியீடு. 7.5% உள் ஒதுக்கீடு அரசாணை - மு.க.ஸ்டாலின் வரவேற்பு. ----- கணக்கில் வராத ரூ.150 கோடி கண்டுபிடிப்பு: கோயம்புத்தூர், ஈரோடு, சென்னை மற்றும் நாமக்கல்லில் கல்வி நிறுவனங்கள் நடத்தி வரும் ஒரு குழுமம் மற்றும் கட்டட ஒப்பந்ததாரர் ஒருவர் உ

Today News செய்திகள் 28.10.2020 | NPM

Image
Today News 28.10.2020 | NPM திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி, தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக முதல்வர் எடப்பாடிக்கு டுவிட். 800 திரைப்படம் தொடர்பாக எனது கருத்தை தெரிவித்தேன்; விஜய்சேதுபதிக்கு எதிராக ட்வீட் செய்ததாக தொடர்ந்து மிரட்டல் வருகிறது. அச்சிலேற்ற முடியாத அளவுக்கு ஆபாச வார்த்தைகளால் ட்வீட் செய்கின்றனர்! ----- 2021ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு. அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை. ----- சென்னை பல்கலைக்கழக அரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு: ஏப்ரல் மாதத்தில் தேர்வெழுத கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி. மாணவர்கள் 1.2 லட்சம் பேர் தேர்ச்சி. தமிழகத்தில் முதல் பல்கலைக்கழகமாக சென்னை பல்கலைக்கழகம் அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கியுள்ளது. ----- பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் நவ.7-ம் தேதி விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ அறிவிப்பு. ----- வீடியோ கான்பரன்சிங் மூலம் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. ----- மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி- க்கு கொரோனா தொற்று உறுதி. ----- நிதின் கட்கரி

Today News செய்திகள் 26.10.2020 | NPM

Image
Today News 26.10.2020 | NPM பாகிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 4.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.8 ஆக பதிவாகி உள்ளது. ----- இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்பு அமைச்சர் மார்க் டி எஸ்பர் (Mark T Esper) ஆகியோர், இன்று இந்தியா வருகை. ----- திருப்பதி கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன். நாளொன்றுக்கு 3 ஆயிரம் பேரை மட்டும் அனுமதிக்க முடிவு. ----- உலகளவில் கொரோனா தொற்று நிலவரம் பாதிப்பு:- 4.33 கோடி குணம்:- 3.19 கோடி உயிரிழப்பு:- 11.59 லட்சம் ----- தமிழகத்தில் காலியாக உள்ள 10,978 காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இப்பணியிடத்துக்கு இணையவழி வாயிலாக மட்டுமே www.tnusrbonline.org விண்ணப்பிக்க முடியும். ----- இன்று 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், திருவண்ணாமலை, கடலூரில் மழைக்கு வாய்ப்பு. ----- பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு.

Today News செய்திகள் 23.10.2020 | NPM

Image
  Today News 23.10.2020 | NPM பீகார் சட்டமன்ற தேர்தல்:   பிரசாரத்தை தொடங்கிய பிரதமர். கொரோனாவிற்கு எதிராக பீகார் தைரியமாக போராடி வருகிறது. பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் - பிரதமர். ----- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்  மீது வழக்குப்பதிவு. பெண்களை கொச்சைப்படுத்தி பேசிய வீடியோ - பல்வேறு தரப்பு புகாரின் பேரில் நடவடிக்கை. சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்ததற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்  - குஷ்பு. ----- தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்  தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில், ‘லஞ்சம் தலைவிரித்தாடும் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகம்.   கட்டுப்படுத்துவது யார்?’ சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு. ----- அக்டோபர் 4ம் தேதி நடைபெற்ற சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு. சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதன்முறையாக தேர்வு நடைபெற்று 19 நாட்களிலேயே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ----- விடுதலைப் புலிகள்  மீதான தடை நீக்கப்பட்டது எதிர்த்து இலங்கை அரசு இங்கிலாந்து நீதிமன்றத

Today News செய்திகள் 21.10.2020 | NPM

Image
 Today News 21.10.2020 | NPM கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பல நாட்களாக பருவமழை பெய்து வரும் வேலையில் தேன்கனிக்கோட்டையில் தற்போது பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. ----- கர்நாடக அரசு உத்தரவு இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது 4 வயது குழந்தை முதல், அனைவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம். ----- கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண், தோட்டக்கலை இளங்கலை, பட்ட மற்றும் பட்டயப் படிப்பிற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அனைத்து விவசாய, தோட்டக்கலை பட்ட மற்றும் பட்டய படிப்பிற்கான ஆன்லைன் கலந்தாய்வு வரும் 27ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும்.  இதற்கான விபரங்கள் இரண்டு தினங்களில் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annamalaiuniversity.ac.in) வெளியிடப்படும்.  ----- வெங்காயத்தை முழுவீச்சில் கொள்முதல் செய்து, நியாயமான விலையில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்காய விலையைக் குறைக்க போர்க்கால நடவடிக்கை தேவை - திமுக தலைவர் ஸ்டாலின். ----- திரையரங்கு உரிமையாளர்களுக்கும் சரி, OTT நிறுவனங்களுக்கும் சரி வில்லன் யார் என்றால் அது தமிழ் ராக்கர்ஸ் தா

Today News செய்திகள் 20.10.2020 | NPM

Image
 Today News 20.10.2020 | NPM நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை: 7 மாதத்தில் பிரதமரின் 7வது உரை. கொரோனவை அடி வேரோடு அழிக்கும் வரை இந்தியர்களின் போராட்டம் ஓயாது - பிரதமர் மோடி. பல தடுப்பூசிகள் இறுதி கட்ட பரிசோதனையில் உள்ளன. நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பண்டிகை காலம் என்பது மகிழ்ச்சிக்கு உரியது. அதே நேரத்தில் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஊடகங்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டும் பணியில் ஈடுபட வேண்டும். ----- ஸ்ரீதர் வேம்பு! உலகப் புகழ் பெற்ற 18000 கோடி டாலருக்கு சொந்தமான “ஸோஹோ கார்ப்பரேஷனின் (Zoho Corporation ) ”. தலைமை நிர்வாக அதிகாரி ( C E O) ! அமெரிக்க சிலிகான் பள்ளத்தாக்கில் இருந்த மாபெரும் நிறுவனத்தை, தன் சொந்த கிராமத்திற்கு கொண்டு வந்த தமிழன். ----- தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,094  பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,94,030 ஆக உயர்வு. சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 857 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,91,754 ஆக அதிகரிப்பு. தமிழகத்தில் மேலும் 50 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 10,741

Today News செய்திகள் 18.10.2020 | NPM

Image
 Today News 18.10.2020 | NPM வரும் 20ம் தேதியில் சென்னை, வட தமிழகத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்வதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக பிரதீப் ஜான் தெரிவிச்சிருக்கார். ----- வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். திருவள்ளூர், வேலூர்,  ராணிப்பேட்டை,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை. ----- விழுப்புரம் , கள்ளக்குறிச்சி , கடலூர் புதுக்கோட்டை,  திருச்சியிலும் கனமழைக்கு வாய்ப்பு.  பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். ----- ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிச.14-ம் தேதி முதல் 2021, ஜன.4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ----- இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மரபணு திருத்த தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட புதிய நோய்த்தொற்று பரிசோதனை முறைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ----- 3 நாள் பயணமாக நாளை சொந்த தொகுதியான வயநாடு செல்கிறார் ராகுல்காந்தி. ----- ஐ பி எல் கிரிக்கெட் போட்டியில், இன்று ஐதர

Weekly Cinema சினிமா செய்திகள் | 16.10.2020 | NPM

Image
இந்த வார சினிமா செய்திகள் Weekly Cinema updates | சினிமா செய்திகள் விஜய்சேதுபதியின் நியூ லுக் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 800 படத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். அப்படத்தின் போஸ்டர் வெளியானது. அச்சு அசலாக அனைத்தும்   முரளிதரன் தோற்றத்தை பிரதிபலித்ததால் அப்போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது. …… எக்கோ படக்குழு நவீன் கணேஷ் இயக்கத்தில் எக்கோ படம் உருவாக உள்ளது. இப்படத்தின் பூஜையில் முகக்கவசம் அணியாமல் படக்குழுவினர் ஈடுபட்டதால் சர்ச்சைக்கு உள்ளானது அதனை தொடர்ந்து தற்போது நடிப்போரை தவிர அனைவரும் முகக்கவசம் அணிந்து கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றி வருகின்றனர். …… சூரியின் உருக்கம் நிலம் வாங்கித் தருவதாக கூறி ரூ.2.70 கோடி பண மோசடி செய்தவிட்டதாக நடிகர் சூரி உருக்கம்.  வீரதீரசூரன் படத் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மற்றும் விஷ்ணுவிஷால் தந்தையுமான ரமேஷ் குடவாலா ஆகியோர் மீது   புகார் தெரிவித்தள்ளார். இந்நிலையில் இப்புகாரை விஷ்ணுவிஷால் மறுத்துள்ளார். …… பஹத் பாசிலின் புதிய கார் விவகாரம்   கடந்த சில தினங்களுக்கு முன்

Today News செய்திகள் 15.10.2020 | NPM

Image
Today News 15.10.2020 | NPM தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம் . முதற்கட்டமாக 500 பேருந்துகளை இயக்க முடிவு - ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் . ----- அக் .19 முதல் சென்னையிலிருந்து மதுரைக்கு வாரம் 3 நாட்களும் , கோவைக்கு வாரம் 6 நாட்களும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அறிவிப்பு . பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு அக்டோபர் 15 ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது . ----- " தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தற்போது வாய்ப்பில்லை . பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் !". - அமைச்சர் செங்கோட்டையன் . ----- காங்கிரஸ் கட்சியை ‘ மூளை வளர்ச்சியில்லாத கட்சி ’ என விமர்சித்ததற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காவல்துறையில் புகாரளித்த நிலையில் , தனது கருத்திற்கு வருத்தம் தெரிவித்தார் குஷ்பு . ----- மத்திய அரசை திமுக எதிர்ப்பதால் 2 ஜி வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளார்கள் . வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப் படுவதால