Today News செய்திகள் 04.10.2020 | NPM
செய்திகள் 04.10.2020
கோவை: கோவையில் ‘‘ஆன்லைன் டிரேடிங்’’ நிறுவனம் நடத்தி முதலீட்டு தொகைக்கு ஏற்ப இரட்டிப்பு பணம் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வாலிபரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
-----
வளசரவாக்கம்: வளசரவாக்கத்தில், ஒருதலையாக காதலித்த பெண்ணின் குடும்பத்தை தீ வைத்து கொளுத்த முயன்ற வாலிபர், கழுத்தறுத்து தற்கொலை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-----
புதுவை அருகே சேதராப்பட்டில் மின்சார ஒயர் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: ரூ.20 கோடி பொருட்கள் நாசம்
-----
ஷார்ஜாவில் இன்றைய ஐபிஎல் போட்டிகள்: மும்பை vs ஹைதராபாத், சென்னை vs பஞ்சாப்.
-----
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.14; டீசல் விலை ரூ.75.95க்கு விற்பனை!!
13-வது நாளாக மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 84.14 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-----
கொரோனா
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.51 கோடி.
கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 10.37 லட்சமாகும்.
கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2.61 கோடியாகும்.
மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 66,267.
-----
காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வறட்சி ஆகியவை பெருந்தொற்றுக்குஅறிகுறிகளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பெருந்தொற்றின் அறிகுறிகளாக வாசனை மற்றும் சுவை இழப்பதும் முக்கியமானதாக இருக்கிறது என்று கூறப்பட்டது. மேலும் தலைவலி, மயக்கம், சோர்வு, உடல்வலி ஆகியவையும் அறிகுறிகளாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பெருந்தொற்றுக்கு சளி, இருமல், வயிற்றுப்போக்கு ஆகியவை அறிகுறிகளாக இருந்தாலும் சுவை மற்றும் வாசனை அறியும் தன்மையை இழப்பதுதான் நம்பகமான அறிகுறி என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
-----
ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்றம்-உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு.
இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-----
காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் வருகிற 9 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது.
-----
Comments
Post a Comment