Today News செய்திகள் 05.10.2020 | NPM

 செய்திகள் 05.10.2020

கள்ளக்குறிச்சி:

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு (34)  தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த தனது காதலி சௌந்தர்யாவுக்கும் இன்று திடீர் திருமணம் நடந்தது.

தியாகதுருகத்தில் உள்ள எம்எல்ஏ இல்லத்தில் எம்எல்ஏவின் பெற்றோர்கள் தலைமையில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது

-------

பிரியங்கா காந்தியிடம் கடுமையாக நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கோருவதாக உத்தர பிரதேச போலீஸ் தெரிவித்துள்ளது

-------

புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 8ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.

இன்று முதல் 7ம் தேதி வரை வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு, தனிநபர் இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்படவுள்ளன. வாரத்தில் 6 நாட்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும்.

9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ள விருப்பத்தின் பேரில் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம்.

திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில், 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

-------

இன்றுமுதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்:

42 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கிறது.



காணொலியில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள் கலந்துக்கொள்கின்றனர்.

-------

2 ஜி வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் தினமும் விசாரணை:

2 ஜி வழக்கில் இருந்து .ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 17 பேர் 2017ஆம் ஆண்டு விடுதலை.

.ராசா, கனிமொழி விடுதலையை எதிர்த்து சிபிஐ, அமலாக்கத்துறை டெல்லி ஹைகோர்ட்டில் அப்பீல்.

2 ஜி மேல்முறையீட்டு மனுக்கள் அவசர வழக்காக விசாரிக்கிறது டெல்லி ஹைகோர்ட்.

-------

நோபல் பரிசுகள் 

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன.

5 நாள் அறிவிக்கப்படும் பரிசுகளில் முதல்நாளான இன்று மாலை 3 மணிக்கு மருத்துவத்துறைக்கு நோபல் பரிசு அறிவிப்பு.

நாளை இயற்பியலுக்கும், அக்.7 வேதியலுக்கும், அக்.8ல் இலக்கியத்திற்கும் நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளன.

அக்.9ல் அமைதிக்கான நோபல் பரிசும், அக்.10ல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படுகின்றன.

-------

சென்னையில் அரசு ஊழியர்களுக்காக புறநகர் மின்சார ரயில்சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா முன்களப் பணியாளர்களும் புறநகர் மின்சார ரயிலில் செல்லலாம்; பொதுமக்களுக்கு அனுமதியில்லை.

கடற்கரை - செங்கல்பட்டு, வேளச்சேரி - அரக்கோணம், கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 38 ரயில்கள் இயக்கம்.

-------

வட்டிக்கு வட்டி

கொரோனா காலத்தில் வங்கிக் கடனுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரம்:

விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அவகாசம்.

ஒரு வார காலம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு.

அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் - உச்சநீதிமன்றம்.

-------

இன்று மாலை சென்னை திரும்புகிறார் .பி.எஸ்:

கடந்த 2ம்தேதி சொந்த ஊருக்கு சென்றிருந்த .பி.எஸ், இன்று சென்னை திரும்புகிறார்.

நாளை மறுநாள் அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இன்று சென்னை திரும்புகிறார் .பி.எஸ்.

அதிமுக தொண்டர்கள் நலன் கருதி முடிவெடுக்க உள்ளதாக இன்று காலை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

தேனி நாகலாபுரத்தில் நகரும் நியாய விலைக்கடை திறப்பு நிகழ்ச்சியில் .பி.எஸ் பங்கேற்றார்.

ஊரில் இருந்த சில நாட்களில் அதிமுக நிர்வாகிகளையும் .பி.எஸ் சந்தித்தார்.

-------

பெங்களூரில் மூடப்பட்டிருந்த இஸ்கான் கிருஷ்ணர் கோவில் மீண்டும் திறக்கப்படுகிறது.

-------

மகாராஷ்ட்ராவில் 7 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் உணவகங்கள், பார்கள் திறக்கப்படுகின்றன.

-------

மேற்குவங்கத்தில் காவல் நிலையத்திற்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்ட பாஜக பிரமுகர்: ஏராளமான பாஜகவினர் நள்ளிரவில் சாலை மறியல்

-------

திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரில் தீ விபத்தால் 30க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்துசேதம்.

சுமார் 2 மணி நேரம் போராடி 40 தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள், சான்றிதழ்கள் தீக்கிரையாகின.

-------

லேசான மழை 

ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தருமபுரி ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்யகூடும்.

-------

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part I | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM