Weekly Cinema சினிமா செய்திகள் | 16.10.2020 | NPM

இந்த வார சினிமா செய்திகள்

Weekly Cinema updates | சினிமா செய்திகள்

விஜய்சேதுபதியின் நியூ லுக்



இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 800 படத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். அப்படத்தின் போஸ்டர் வெளியானது. அச்சு அசலாக அனைத்தும்  முரளிதரன் தோற்றத்தை பிரதிபலித்ததால் அப்போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது.

……

எக்கோ படக்குழு

நவீன் கணேஷ் இயக்கத்தில் எக்கோ படம் உருவாக உள்ளது. இப்படத்தின் பூஜையில் முகக்கவசம் அணியாமல் படக்குழுவினர் ஈடுபட்டதால் சர்ச்சைக்கு உள்ளானது அதனை தொடர்ந்து தற்போது நடிப்போரை தவிர அனைவரும் முகக்கவசம் அணிந்து கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றி வருகின்றனர்.

……

சூரியின் உருக்கம்

நிலம் வாங்கித் தருவதாக கூறி ரூ.2.70 கோடி பண மோசடி செய்தவிட்டதாக நடிகர் சூரி உருக்கம். 



வீரதீரசூரன் படத் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மற்றும் விஷ்ணுவிஷால் தந்தையுமான ரமேஷ் குடவாலா ஆகியோர் மீது  புகார் தெரிவித்தள்ளார். இந்நிலையில் இப்புகாரை விஷ்ணுவிஷால் மறுத்துள்ளார்.

……

பஹத் பாசிலின் புதிய கார் விவகாரம் 

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் பஹத் பாசில் சுமார் 1.9 கோடி மதிப்புள்ள 'போர்ஸ்சே 911 கரேரா எஸ்' என்கிற புதிய கார் ஒன்றை வாங்கி, தனது மனைவி  இணைந்து அந்த

காருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார்.




இதற்கு ஒரு பக்கம் வாழ்த்துக்கள் குவிந்தாலும் அதேசமயம் சில நெட்டிசன்கள்

பஹத் பாசிலின் இந்த செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நாடே கொரோனா தாக்கம் காரணமாக தத்தளித்து வரும் இந்தநிலையில், இவ்வளவு ஆடம்பரமான கார் வாங்குவது அவசியமா...? அந்த தொகையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடையாக வழங்கி

இருக்கலாமே..?” என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

……

நயன்தாரா நடிப்பாரா?

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'பிரதி பூவன்கோழி'.

இப்படத்தை தமிழ், ஹிந்தியில் முதலில் ரீமேக் செய்ய  திட்டமிட்டுள்ளனர் . இது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் தமிழில் நடிகை நயன்தாராவை நடிக்க

வைக்க பேசி வருகின்றனர்.

……

தனுஷ் - அனிருத் கூட்டணி

தனுஷின் '3' படத்தில் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத்.

தொடர்ந்து தனுஷ் நடிக்கும் மற்றும் தயாரிக்கும் படங்களில் இவர் இசையமைத்து வந்துள்ளார்.  இவர்களது கூட்டணி ஒருக்கட்டத்தில் பிரிந்தது. தனுஷ் தன்னுடைய படத்திற்கு வேறு இசையமைப்பாளர்களை பயன்படுத்தி வந்த நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ்  நடிக்கவுள்ள அந்தப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க இருப்பதாக

உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

……

பிரசாந்த் படத்திலிருந்து விலகிய மோகன் ராஜா

ஹிந்தியில் வெற்றி பெற்ற 'அந்தாதூன்' படம் தமிழ், தெலுங்கில்

ரீ-மேக்காகிறது. தமிழில் பிரசாந்த் நடிக்க, அவரின் தந்தை தியாகராஜன் தயாரிக்கிறார்.

இப்படத்தை மோகன் ராஜா இயக்குவதாக இருந்தது. இந்நிலையில் சில காரணங்களால்  மோகன் ராஜா விலகி உள்ளார்.

அவருக்கு பதில் 'பொன்மகள் வந்தாள்' படத்தின் இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்குகிறார்.

……

எஸ்.ஏ. சந்திரசேகர் விளக்கம்

நடிகர் விஜய்யை முதல்வர்  நாற்காலியில் அமர வைத்து பார்க்கும் கனவுடன் இருக்கும் அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பா.ஜா.வில் இணையபோவதாக சமுகவலைத்தளங்களில் செய்தி பரவிவருகிறது. இந்நிலையில்  அவர் இச்செய்தி தவறானதும்  என்றும் எங்கிருந்து இதுப்போன்று தவறான செய்திகளை பரப்புகிறார்கள் தெரியவில்லை என விளக்கம் கொடுத்து முற்றப்புள்ளி வைத்துள்ளார்.

……


Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part I | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM