Today News செய்திகள் 14.10.2020 | NPM

Today News 14.10.2020 | NPM

Tamilnadu School Opening.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - நவம்பர் 11ம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

-----


பழனியில் பால்காவடி வேண்டுதல் செலுத்திய நடிகை காயத்ரி ரகுராமன்.

-----

Chief Minister Palanisamy Tweeter Account.

ட்விட்டரில் முதலமைச்சரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது! 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.

-----

தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் சாரல் மழையின் காரணமாக, குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு.


-----

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ஐபோன்-12 சீரிஸ்.

iPhone 12 series.


ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ், பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நான்கு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் வரும் 30ந் முதல் தேதி விற்பனை ஆக உள்ளது!

-----

இன்று வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் அவர்களின் பிறந்தநாள்.


-----

நாளை முதல் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி

அக்டோபர் 15 முதல் பாதி அரங்கு நிரம்ப படக்காட்சிகளைத் திரையிட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

-----

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை வரும் 31ம் தேதி வரை நீட்டித்து சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதற்குள் விண்ணப்பிக்காதவர்கள் அபராதத்துடன் நவம்பர் 7 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நவம்பர் 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கைக்கு நவம்பர் 4-ம் தேதி இறுதி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கால அவகாசத்தை நீட்டித்து சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

-----

தீபாவளியை முன்னிட்டு அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது. http://www.tnstc.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

-----

தலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு (அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை) நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.

-----

ராஜ் டிவி- க்கு இன்னிக்கு 27வது வயசு பிறக்குதாம்.. வாழ்த்துக்கள்

-----

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தலைவர் பதவிக்கும் மன்னன் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

-----

ஊராட்சிகளில் கட்டப்படும் குடியிருப்பு வீடுகளுக்கு 10000 சதுர அடிவரை ஊராட்சி தலைவர்களே அனுமதி வழங்கலாம் என அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் 10 ஆயிரம் சதுரஅடி வரையிலான குடியிருப்புகளுக்கான திட்ட அனுமதியை உள்ளாட்சி அமைப்புகளே வழங்கலாம் என தமிழக அரசு உத்தரவு

முன்னதாக 4000 சதுர அடி,பிறகு 7000 சதுர அடியாக இருந்து இப்போது மீண்டும் 10000 சதுர அடியாக உயர்த்தப்பட்டுள்ளது!

வணிக கட்டிடங்களுக்கான அளவு 2000 சதுர அடியாக தொடர்கிறது!

-----

ரஜினிக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

கொரோனா கேம்ப் (CAMP)-புக்கு ராகவேந்திரா  மண்டபத்தை கேட்ட போது சாக்கு போக்கு சொன்ன ரஜினி இப்போது டேக்ஸ் (TAX) கட்ட  மறுத்து கோர்ட் போயிருக்கார்.

ராகவேந்திரா மண்டபத்திற்கு சொத்து வரி செலுத்த பிறப்பித்த உத்தரவுக்கு (ரூ.6.50 லட்சம் சொத்து வரி) எதிராக வழக்கு தொடர்ந்த ரஜினிக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

அபராதம் விதிக்க நேரிடும் என்கிற எச்சரிக்கையை தொடர்ந்து வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினி தரப்பு பதில்.

-----

யானை மீது ஏறி யோகா செய்த பாபா ராம்தேவ், கீழே விழுந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கீழே விழுந்த உடனே ராம்தேவ் எதுவும் நடக்காதவர் போல எழுந்து நின்றார். இருந்தபோதும் அவருக்கு முதுகு தண்டில் பலத்த அடிபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

-----

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part I | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM