கொரோனா குறித்த இன்றைய தகவல்கள் Second Wave Covid | NPM

கொரோனா குறித்த இன்றைய தகவல்கள்

Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes.தமிழகம் முழுவதும் இன்று முதல் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம்:

இ- பதிவு முறை, 'சாப்ட்வேர்' மூலம் இயங்குவதால், விபரங்களை பதிவு செய்தவுடன், உடனுக்குடன் ரசீது வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் நெருங்கிய உறவினர்களின் இறப்பு போன்ற, அவசர தேவைக்காக பயணிப்போர், உடனுக்குடன் விண்ணப்பித்து பதிவு பெறலாம்.

*****

ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தம்:

நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் ரெம்டெசிவிர் மருந்துகளை நேரடியாக  வழங்க அரசு முடிவு எடுத்ததால் அரசு மருத்துவமனையில் விற்பனை செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல்.

*****

புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா இன்று கொரோனா தொற்று காரணமாக மறைந்தார்.

*****

ஆந்திராவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கு செய்ய அவர்களின் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

*****

இந்தியா முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 2,81,000 ஆக குறைந்தது.

முன்பு நாடு முழுவதும் தினந்தோறும் 4 லட்சம் தினசரி பாதிப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இன்று 2,81,000 ஆக குறைந்துள்ளது.

*****

எனது கோரிக்கையை ஏற்று தமிழகத்திற்கு ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை அதிகரித்த பிரதமர் மோடிக்கு நன்றி - எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி.

கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு பேருதவியாக இருக்கும் - பழனிசாமி.

*****

கொரோனா சிகிச்சைக்காக 2DG எனும் புதிய மருந்து வெளியீடு.

தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2DGvகொரோனா மருந்து அறிமுகம் செய்யப்பட்டது.

2DG கொரோனா மருந்தை தயாரித்து மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் 2DG மருந்தை அறிமுகம் செய்து வைத்தார்.

2DG கொரோனா மருந்தைத் தண்ணீரில் கலந்து நோயாளிகள் குடிக்கலாம்.

கொரோனா நோயாளிகள் விரைவில் அதிலிருந்து மீள முடியும் என அறிவிப்பு.

*****

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண உதவி:

தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ். முருகன் கொரோனா ஊரடங்கால் பணி இன்றி தவிக்கும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை நடிகை கோவை சரளா மற்றும் நடிகர் தாடி பாலாஜி முன்னிலையில் வழங்கினார். சுமார் 300 க்கு மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பெற்றுக் கொண்டனர்.

*****

காவலர்களின் குமுறல்.

வேலையே செய்யாமல் வீட்டிலிருந்து முழு சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கும் அதே நிலைதான் 24 மணி நேரமும் ரோட்டில் நின்று பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல்துறைக்கும் அதே நிலைதான் என்ன அநியாயம்... கொந்தளித்து போய் உள்ளனர் தமிழக காவல்துறையினர்.

*****

பொது இடங்களில் ஆவி பிடிப்பதால் மற்றவர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதை ஊக்குவிக்கக் கூடாது

- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

*****

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part I | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM