Today Headline News இன்றைய மழை செய்திகள் | Tamil Nadu Rain Updates | NPM

Today Headline News இன்றைய மழை செய்திகள் | Tamil Nadu Rain Updates | NPM

Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes.

21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை மாவட்டம்,

செங்கல்பட்டு மாவட்டம்,

காஞ்சிபுரம் மாவட்டம்,

திருவள்ளூர் மாவட்டம்,

விழுப்புரம் மாவட்டம்,

திருவண்ணாமலை மாவட்டம்,

வேலூர் மாவட்டம்,

ராணிப்பேட்டை மாவட்டம்,

பெரம்பலூர் மாவட்டம்,

அரியலூர் மாவட்டம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம்,

ராமநாதபுரம் மாவட்டம்,

புதுக்கோட்டை மாவட்டம்,

தஞ்சை மாவட்டம்,

திருவாரூர் மாவட்டம்,

நாகை மாவட்டம்,

மயிலாடுதுறை மாவட்டம்,

கடலூர் மாவட்டம்,

கன்னியாகுமரி மாவட்டம்,

நெல்லை மாவட்டம்,

தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.

*****

மற்றும் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.

நவம்பர் 30 முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் கன மழை நீடிக்கும்.

*****

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் வரும் 30 ஆம் தேதி  புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு.

*****

மதுரை மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி உபரிநீா் வெளியேறி வருவதால்,

ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.

*****

“பனைமரங்கள் புயல் சூறைக்காற்றை எதிர்த்து நின்று வலுவாக நிற்பதுடன் மண்ணையும் பாதுகாக்கிறது.”தூத்துக்குடி பகுதியில் உள்ள சிறு தீவுகளில் கடல் அரிப்பை தடுக்க பனை மரங்கள் நட்டு இயற்கையைப் பாதுகாக்கும் மக்களின் முயற்சிக்கு “மன் கி பாத்” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு.

*****

மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தாலும் பாடத்திட்டத்தை குறைக்க அவசியம் இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். பள்ளிகள் திறக்கப்பட்ட பின் கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்கள் நடத்தி முடிக்கப்படும்.

*****

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (நவ.29 – 29.11.2021) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு.

*****

திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட டவுன் காட்சி மண்டபம் அருகில் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்பு மற்றும் மரக்கிளைகள் அகற்றும் பணி நடைபெற்று வருவதால் பணி முடியும் வரை டவுன் காட்சி மண்டபம் மற்றும் சுற்றுப்பகுதியில் பாதுகாப்பு கருதி மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பணி முடிந்தவுடன் உடனடியாக மின் வினியோகம் வழங்கப்படும்.

*****

பத்தாண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் எந்த வித திட்டப்பணிகளும் மேற்கொள்ளாதது தான் தற்போதைய மழை பாதிப்பிற்கு காரணம்.இதை சொன்னால் அ.தி.மு.க வினர் வருத்தப்படுகிறார்கள் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.

*****

சென்னை கே.கே.நகர் சாலைகளில் தேங்கியுள்ள  மழை நீரால் போக்குவரத்து முடக்கம்.

*****

செங்கல்பட்டு மாவட்டத்தில் இடைவிடாது பெய்த மழையால் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் முழுவதும் தண்ணீரால் சூழ்ந்துள்ளது.

*****

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இருந்த பேருந்து நிறுத்தம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக இடிந்து விழும் நிலையில் இருந்த காரணத்தால் ஜேசிபி இயந்திரம் மூலம் போலீசார் அதனை ஆற்றில் தள்ளி அப்புறப்படுத்தினார்கள்.

*****

கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (நவ.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

*****

முதலமைச்சர் ட்வீட்:

*****

கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை 29/11/21 விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

*****

திருநெல்வேலி வட்டம் மற்றும் நகரம் வழுக்கோடை  பகுதியில் உள்ள  கால்வாயில் ஏற்பட்ட அடைப்பினை  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் தீயணைப்பு துறையினர்  கால்வாயில்  சுகாதார  வேலையினை  மேற்கொண்டார்கள் . தற்போது கால்வாயில் தண்ணீர் தடையின்றி செல்கிறது.

*****

Comments

  1. Free No Deposit Casino Bonus Codes
    › casinos › casinos 1,100+ Free Casino No Deposit Bonus Codes USA 2021 ✓ Exclusive USA 코인카지노 주소 Online Casinos with Free Casino Bonuses for US Players 2021.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part I | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM