ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு | DMK One Year Achievement Explaining in Public Meeting | NPM

 ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்ட பேச்சு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes.

முதல் முறையாக கோடை காலமான மே மாதத்தில் மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு:

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை. தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு. கொடநாடு கொலை- கொள்ளை. இதுதான் அ.தி.மு.க ஆட்சியில் நடந்த சாதனை!

*****

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்:

சென்னை துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு சொகுசு கப்பல் சேவை ஜூன் 4 ஆம் தேதி தொடக்கம் - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

*****

இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:

இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

நிதி நெருக்கடியில் இருந்த தமிழ்நாடு இப்போது மீண்டும் வந்து கொண்டிருக்கிறது என்றும் தமிழ்நாட்டை தலைசிறந்த மாநிலமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

*****

சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு:

இருளை அகற்றி ஒளியூட்டும் சின்னமாக உதயசூரியன் விளங்குகிறது; 

சேலத்தை உள்ளடக்கிய மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் சுறுசுறுப்பாக பணியாற்றுகின்றனர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

சேலம் மாவட்டம் சாதாரண மாவட்டம் அல்ல, வீரபாண்டியார் மாவட்டம். இருளை அகற்றி ஒளியூட்டும் சின்னமாக உதயசூரியன் விளங்குகிறது. 

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெறும் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடியில் இருந்த தமிழ்நாடு இப்போது மீண்டும் வந்து கொண்டிருக்கிறது என்றும் தமிழ்நாட்டை தலைசிறந்த மாநிலமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டை திமுக அரசு தலைநிமிர வைத்திருக்கிறது.

வீழ்ச்சியுற்று இருந்த தமிழ்நாடு, இன்று எழுச்சியுற்றுள்ளது. 

ஊர்ந்து கொண்டிந்த தமிழ்நாட்டை, ஓராண்டு திமுக அரசு நெஞ்சை நிமிர வைத்திருக்கிறது.

மதத்தின் பெயரில் ஆட்சிக்கு எதிராக அவதூறுகளை பரப்பி வருகின்றனர். யாருக்கும் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

மக்களுக்காக என் சக்தியையும் மீறி உழைப்பேன், உழைத்துக்கொண்டே இருப்பேன்.

என்னுடைய இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன், மக்களுக்கு நன்மை செய்யவே நேரம் பத்தவில்லை.

ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டத்திற்கும், தொகுதிக்கும் கூட எதையும் செய்யவில்லை.

திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என அறிவித்தபோது, இதற்கு வாய்ப்பே இல்லை என்றார்கள்.

ஆட்சிக்கு வந்த உடனே பெட்ரோல் விலையை குறைத்தது திமுக அரசு.

மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை குறைக்கும் போது, மாநில வரியும் குறையும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதிமுக ஆட்சியில் ஒரே ஒரு முறைதான் ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு சரியாக ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

இயற்கை திமுக ஆட்சிக்கு கொடுத்த வரத்தால், இந்தாண்டு மே மாதமே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

*****

சேலம் மாவட்டம் மேட்டூரில், காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

*****


Comments

Popular posts from this blog

Tamil News Live 15 August 2024: தமிழ்நாட்டில் 78வது சுதந்திர தின விழா - தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | NPM

Tamil News Live 17 January 2025: தமிழ்நாட்டில் சென்னையில் இரவு நேர கார் பந்தயம் - முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி | NPM

Tamil News Live 30 January 2025 : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு | NPM