கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் 2023 | Karnataka Election Results May 2023 | NPM

 கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் 2023 | Nainarpalayam.com

மொத்த தொகுதி: 224

பெரும்பான்மை: 113

வெற்றி விவரம்

காங்கிரஸ்-137

பாஜக-65

ம.ஜ.த-19

மற்றவை-03

காங்கிரஸ் வெற்றி.!

ராகுல் காந்தி - நன்றி

முதலாளிகளுக்காக ஆட்சி நடத்தும் பாஜகவுக்கு கர்நாடக ஏழை மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர். கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி என்றும் துணை இருக்கும்.

கர்நாடக தேர்தல் வெற்றி என்பது மக்களுக்கான வெற்றி. தேர்தல் வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள், தலைவர்களுக்கு நன்றி.

******

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது. இந்த வெற்றியில் ராகுல் மேற்கொண்ட யாத்திரைக்கும் மிக முக்கிய பங்கிருக்கிறது.

******

கர்நாடக தேர்தல் முடிவுகள்: கனகபுரா தொகுதியில் பதிவான வாக்குகளில் 75.03% வாக்குகளைப் பெற்று இமாலய வெற்றியை பதிவு செய்தார் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்.

1,43,023 வாக்குகள் பெற்று வெற்றி.

எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக அமைச்சர் அசோக் உள்ளிட்ட 14 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

டி.கே.சிவக்குமார் - நன்றி

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் நிலையில், டி.கே.சிவக்குமார் ஆனந்த கண்ணீர்.

வெற்றிக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் மக்கள் தான் காரணம்

முதல்வர் போட்டியில் உள்ள சித்தராமையா உள்ளிட்டோருக்கு நன்றி.

******

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து.

மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கும் முதல்வர் வாழ்த்து.

******

திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது.

ராகுல்காந்தி தகுதிநீக்கம், இந்தி திணிப்பு, ஊழல் என அனைத்தும், மக்கள் மனதில் எதிரொலித்துள்ளது.

பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர்.

அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.

இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம். 

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்.

******

பிரதமர் மோடி வாழ்த்து!

கர்நாடகா தேர்தல் வெற்றி : காங்கிரஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

******

கர்நாடகாவில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்:

கோவிந்த கார்ஜோள், பாசனத்துறை அமைச்சர், முத்தோள் தொகுதி - தோல்வி

ஆர்.அசோக், வருவாய்த்துறை அமைச்சர், டி.கே.சிவகுமாரை எதிர்த்து சன்னபட்னா தொகுதி - தோல்வி; பத்மநாபநகர் தொகுதி - வெற்றி.

பி.ஸ்ரீ.ராமுலு, போக்குவரத்துத் துறை அமைச்சர், பெல்லாரி ஊரகம் - தோல்வி.

முருகேஷ் நிராணி, தொழில்துறை அமைச்சர், பீளகி தொகுதி - தோல்வி.

வி.சோமண்ணா, வீட்டு வசதி துறை அமைச்சர், வருணா தொகுதி, சாம்ராஜ் நகர் - 2 இடங்களிலும் தோல்வி.

டாக்டர் சுதாகர், சுகாதாரத்துறை அமைச்சர், சிக்கப்பள்ளாபுரா நகர் தொகுதி - தோல்வி.

ஹாலப்பா ஆச்சார், சுரங்கம் மற்றும் புவியியல் அமைச்சர், எல்புர்கா தொகுதி - தோல்வி.

எம்.டி.பி.நாகராஜ், சிறு குறு தொழில் வளத்துறை அமைச்சர், ஒசகோட்டை தொகுதி - தோல்வி.

கே.சி.நாராயண கவுடா, விளையாட்டுத்துறை அமைச்சர், கிருஷ்ணராஜ் பேட் தொகுதி - தோல்வி

பி.சி.பாட்டீல், விவசாயத் துறை அமைச்சர், ஹிரேகேரு தொகுதி - தோல்வி.

ஜே.சி.மாதுசாமி, சட்டத்துறை அமைச்சர் - சிக்கநாயகனஹள்ளி தொகுதி - தோல்வி

சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி, சிர்சி தொகுதி - தோல்வி

பி.சி.நாகேஷ், கல்வித்துறை அமைச்சர்- திப்தூர் தொகுதி - தோல்வி!

சங்கர் மூனனேகுப்பா, துணி நூல் துறை அமைச்சர் நாவல்குண்ட் தொகுதி - தோல்வி.

******

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part I | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM