Today Headline News இன்றைய முக்கிய செய்திகள் | NPM

இன்றைய முக்கிய செய்திகள்:

Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes.

கர்நாடக முதல்வராக மூத்த அமைச்சர் பசவராஜ் பொம்மை தேர்வு.


முன்னாள் முதல்வர் எஸ்.ஆர். பொம்மை மகன் பசவராஜ் பொம்மை.

எடியூரப்பாவுக்கு நெருக்கமான பசவராஜ் பொம்மை உள்துறை அமைச்சராக இருந்தார்.

*****

கொரோனா தொற்று பாதிப்பு குழந்தைகளுக்கு தீவிரமாக இருக்காது என்பதால் தொடக்கப்பள்ளிகளை திறக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் குழு தெரிவித்துள்ளது.

*****

திருச்சி: அதிமுகவை மீட்க வேண்டும் என்பது தான் எங்கள் முயற்சியும் சசிகலாவின் முயற்சியும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுக்கத்தான் அமமுக தொடங்கப்பட்டது. தேர்தல் வெற்றி தோல்வியை கடந்து எங்கள் இலக்கை நோக்கி தான் பயணம் செய்கிறோம் எனவும் கூறினார்

*****

டெல்லி: தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார். ஒளிப்பதிவு திருத்த மசோதா தொடர்பான கருத்துகளை அறிய நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெறுகிறது

*****

மேற்கு வங்க மாநில பெயர் மாற்றம் குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேச உள்ளேன். கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

*****

இந்தியாவில் 22 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் கவலை தெரிவித்துள்ளார். சில பகுதிகளில் கொரோனா தொற்று கவலை அளிக்கும் அளவுக்கு அதிகரித்து வருவதாக லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

*****

பெகாசஸ் (Pegasus) விவகாரம் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன. டெல்லி நாடாளுமன்ற விளாகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் டி.ஆர்.பாலு, கனிமொழி, சுப்ரியா சுலே, சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார

*****

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 273 புள்ளிகள் சரிந்து 52,579 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. டாக்டர் ரெட்டீஸ் பங்கு 10 சதவீதமும், ஆக்சிஸ் வங்கி Axis Bank பங்கு 3 சதவீதமும், சன்பார்மா பங்கு 2 சதவீதமும் விலை குறைந்து கைமாறின. Kotak கோட்டக் வங்கி பங்கு 2 சதவீதமும், எச்.டி.எஃப்.சி HDFC, ரிலையன்ஸ் Reliance, ஏசியன் பெயின்ட் Asian Paint பங்குகள் 1 சதவீதத்துக்கு மேல் விலை குறைந்தன.

*****

கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த அனைத்து குழந்தைகளுக்கும் பி.எம். கேர் (PM Care) திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

குழந்தைகள் காப்பகங்களில் கொரோனா தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு.

*****

போக்குவரத்து துறையில் வேலை மோசடி செய்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாத அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சிறப்பு நீதிமன்றம் அதிருப்தி. அமைச்சர் என்பதால் ஆஜராவதற்கு விலக்களிக்கவோ, சலுகை வழங்கவோ முடியாது எனவும் 8-ஆம் தேதி ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவு.

*****

டிசம்பரில் நடத்தப்பட்ட தொலைதூரக்கல்வி தேர்வு முடிவுகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. http://ideunom.ac.in என்ற இணையதளத்தில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

*****

கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகள் இடையே இன்று இரவு நடக்க இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர் குர்ணல் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட நிலையில் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

*****

புகை பிடிப்பதற்கு எதிராக குரல் கொடுக்கும் அல்லு அர்ஜுன்:

கொரோனா காலத்தில் புகை பிடிப்பதன் கெடுதல்கள் குறித்து பேசுவது மிகவும் முக்கியமானது மற்றும் அவசியமும் கூட. புகை பிடிப்பவர்கள் கொரோனவால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மாற்றத்தைத் தூண்டுவதற்கு நடிகர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

இதை கடைபிடித்து தற்பொழுது நடிகர் அல்லு அர்ஜுன் புகை பிடிப்பதால் ஏற்படும் கெடுதல்கள் குறித்து தனது ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளார்.

மேலும் அவரது ரசிகர்கள் புகை பிடிக்கக் கூடாது எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார்.

*****

Comments

  1. Many patrons 바카라사이트 don't realize that they can get kicked out for trying to capitalize on one other particular person's winnings—even if that particular person has deserted their steadiness on a slot machine. Michael Page, who works at San Manuel Indian Bingo & Casino, said in a different Quora thread that this is generally referred to as "ticket surfing." Buffalo™ Gold provides gamers an enhanced expertise to their favourite Buffalo™ recreation. Choose among 24 thrilling table video games, with pleasant dealers and an environment of unparalleled comfort. Try your hand at such favorites as Blackjack or Roulette, or take a shot at Mini-Bacc, Craps, Cajun Stud, Head’s Up Hold’em, Flop Poker and High Card Flush. If you’re within the mood for thrilling, high-stakes motion, our devoted excessive restrict table video games are is the place.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part I | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM