கொரோனா குறித்த இன்றைய தகவல்கள் Second Wave Covid | NPM
கொரோனா குறித்த இன்றைய தகவல்கள் Second Wave Covid | NPM ரெம்டெசிவிர் மருந்தை பெறுவதற்கான இணையதள முகவரியை அறிவித்தது தமிழக அரசு. தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக ரெம்டெசிவிர் மருந்து அரசு சார்பாக வழங்கப்படும் என நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. https://ucc.uhcitp.in/form/drugs https://tnmsc.tn.gov.in/ ***** கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு தீவிரப்படுத்த இன்றுமுதல் (18ஆம் தேதி) முதல் காவல்துறை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலை 10 மணி முதல் பொதுமக்கள் சரக்கை எல்லைக்கு வெளியே செல்ல இப்பதிவு அவசியம் ***** கொரோனா மருத்துவ வழிக்காட்டுதல்களில் இருந்து பிளாஸ்மா சிகிச்சை முறையை நீக்கியது மத்திய அரசு; பிளாஸ்மா சிகிச்சை முறை எதிர்பார்த்த பலனை அளிக்காததால் மருத்துவ வழிக்காட்டுதலில் இருந்து நீக்கப்பட்டதாக விளக்கம். ***** ஆந்திராவில் கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைக்கு நிவாரணம்..! ஒவ்வொரு குழந்தை பெயரிலும் ரூ.10 லட்சம் டெபாசிட். - ஜெகன்மோகன்