Today News செய்திகள் 28.09.2020 | World Rabies Day | NPM

 செய்திகள் 28.09.2020

சர்வதேச வெறிநாய்க்கடி நோய் தினம் - செப்டம்பர் 28

சர்வதேச வெறிநாய்க்கடி நோய் தினம் (World Rabies Day) ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 28-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறதுவெறிநாய்க்கடி நோயையும் அதைத் தடுப்பதையும் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் விதமாக, முதல் வெறிநாய்க் கடி நோய்த் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து நோய்த்தடுப்புக்கு அடித்தளம் அமைத்த லூயிபாஸ்ட்டரின் மறைவு தினத்தன்று இந்த சிறப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

 


வெறிநாய்க்கடி நோய் இந்தியாவில் ஒரு பொது சுகாதாரப் பிரச்னை. இதனால் ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் மரணம் அடைவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

 

இது விலங்குகளில் இருந்து மனிதனுக்குப் பரவுகிறது. கடிபட்ட அல்லது கீறப்பட்ட இடங்களின் வழியாக உமிழ்நீரில் இருக்கும் வைரஸ் மனித உடலுக்குள் செல்கிறது. நாய்க்கடிக்குப் பின் 1 முதல் 3 நாட்கள் கழித்து  அறிகுறிகள் தோன்றுகின்றன. நாய்க்கடி மற்றும் நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாத 5 முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளே பெரும்பாலும் நாய்க்கடிக்கும் நோய்க்கும் ஆளாகின்றனர்.

 

குழந்தைகள் தங்கள் பெற்றோருக்குப் பயந்து பலவேளைகளில் கடிபட்டதை மறந்துவிடுகின்றனர். சில வேளைகளில் நாயால் தாக்கப்பட்ட குழந்தைகள் கடிபட்டதை அல்லது கீறப்பட்டதை அறியாமல்  போகின்றனர். பெற்றோரும் அதை அலட்சியம் செய்து காயத்துக்கு வீட்டு மருத்துவ முறையில் மிளகுப்பொடி அல்லது மஞ்சளால் மட்டுமே சிகிச்சை அளிக்கின்றனர்.

 

அதைத் தடுக்கும் பல்வேறு வழிமுறைகளைப் பற்றியும் விலங்கு கடித்தவுடன் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய அவசியத்தைப் பற்றியும் பொது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பின்வரும் உண்மைகளைப் பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

 

நாய்க்கடியைத் தவிர்க்க, பொது மக்களுக்குக் குறிப்பாகக் குழந்தைகளுக்கு, நாயின் நடத்தை மற்றும் அதன் உடல் பாவனைகள் (கோபம், சந்தேகம், நட்பு போன்றவை) பற்றிய விவரங்களை போதிக்க வேண்டும். விலங்கு கடித்தால் அல்லது கீறினால் அதை மறைக்காமல் கூற குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்படிக் கூறும் குழந்தைகளைப் பாராட்ட வேண்டும். வெறுங்கையால் நாய் கடித்த காயத்தைத் தொடக்கூடாது. மண், மிளகு, எண்ணெய், மூலிகை, சுண்ணாம்புப்பொடி, வெற்றிலை போன்ற எரிச்சலூட்டும் பொருட்களைக் கடிபட்டக் காயத்தின் மீது  இடக்கூடாது.

நாய் கடித்துவிட்டால் வெறிநோயைத் தடுக்கக், கடிபட்ட பின்னான தடுப்பு மருந்தை எடுக்க வேண்டும். நாய் கடித்து விட்டால் 10 நிமிடங்களுக்கு சோப்பு மற்றும் நீரால் கழுவ வேண்டும். அதன்பின் அதனால் ஏற்பட்ட காயத்திற்கான சிகிச்சை மற்றும் நாய்க்கடிக்குரிய தடுப்பூசி போன்றவை குறித்த விவரங்களை மருத்துவரை  அணுகி பெற்றுக் கொள்ள வேண்டும்.

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part I | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM