Today News செய்திகள் 29.09.2020 | NPM

 செய்திகள் 29.09.2020

வாட்ஸ்-அப் செயலி மூலம் புதிய மோசடி நடைபெறுவதாக எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.

வங்கி சார்பில் நடத்தப்பட்ட லாட்டரி அல்லது அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் போட்டியில் பரிசு பெற்றதாகக் கூறி, குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொள்ளுமாறு குறுஞ்செய்தி அனுப்பி மோசடி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


அந்த குறுந்தகவல்களை வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம் எனவும், வங்கித் தரப்பில் வாடிக்கையாளர்கள் விவரங்கள் கேட்கப்பட மாட்டாது எனவும், எஸ்பிஐ வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-

கேரளாவில், அக்-15 ஆம் தேதிக்குப் பின் சுற்றுலா தலங்கள் திறப்பு - அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்.

-

டெல்லி விமான நிலைய 2-ஆம் முனையத்தில் அக்டோபர் 1 முதல் விமானங்களின் இயக்கம் தொடங்குவதாக அறிவிப்பு.

-

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

-

கேரளா

கொரோனா தொற்று சூழல் குறித்து ஆலோசிக்க கேரளாவில் இன்று  அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

-

உத்தரகண்ட்

கங்கை தூய்மை திட்டத்தின் கீழ் இன்று உத்தரகண்டில் 6 புதிய திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

-

அக். 7ம் தேதி முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் இயங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

-

பரவலாக மழை

சேலத்தில் நேற்று மாலையிலிருந்தே மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவில் பலத்த மழை பெய்தது.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையினால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதமான காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 7மணிக்கு மேல் சுமார் ஒரு மணி நேரம் இடிமின்னலுடன் பெய்த மழையினால் சாலையெங்கும் நீர் தேங்கியது.

இதேபோல், சிதம்பரம், காஞ்சிபுரம், உளுந்தூர்பேட்டை,திட்டக்குடி, காரியாப்பட்டி பகுதிகளில் காற்றுடன்கூடிய மழை பெய்தது அப்பகுதிகளில் வெப்பத்தைக் குறைத்துள்ளது.

-

2ஜி மேல்முறையீட்டு வழக்கை விரைந்து முடிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுடெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.

-

கொரோனா

உலகளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 3,35,40,007 கோடியை தாண்டியுள்ளது.

இதுவரைக்கும் 10,06,057 பேர் உயிரிழப்பு.

24867725 பேர் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரைக்கும் 7,359,507 பேர் பாதிக்கப்பட்டு, 209,759 பேர் உயிரிழந்துள்ளனர்.

-

Comments

Popular posts from this blog

Tamil News Live 15 August 2024: தமிழ்நாட்டில் 78வது சுதந்திர தின விழா - தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | NPM

Tamil News Live 17 January 2025: தமிழ்நாட்டில் சென்னையில் இரவு நேர கார் பந்தயம் - முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி | NPM

Tamil News Live 30 January 2025 : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு | NPM