Posts

Today News செய்திகள் 05.11.2020 | NPM

Image
 Today News 05.11.2020 | NPM ஹரியானா: தனியார் துறையில் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கே 75% வேலைவாய்ப்பு வழங்க வகைசெய்யும் சட்டம் ஹரியானாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ----- சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் மருந்துக்கடையில் மருத்துவ படிப்பு படிக்காமல் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்த புவனகிரி தாலுக்கா கொத்தட்டை பகுதியைச் சேர்ந்த போலி மருத்துவர் ரமணன் வயது 35 என்பவர் மீது புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து அவரிடம் இருந்த மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் ----- ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு- க்கள் அனைத்தையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார் ----- நடிகர் விஜய் புதிய கட்சியா.. ?  எஸ்.ஏ. சந்திரசேகர் விளக்கம்: அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய நான் தான் விண்ணப்பித்துள்ளேன்.  இது என்னுடைய முயற்சி தான்; விஜய்யின் அரசியல் கட்சி அல்ல எனவும் கூறினார். ----- டெல்லியில் பட்டாசுகளுக்கு தடை: கெஜ்ரிவால் காற்று மாசு, கொரோனா பாதிப்பு சூழலை கருதி டெல்லியில் பட்டாசுகளு

Today News செய்திகள் 03.11.2020 | NPM

Image
 Today News 03.11.2020 | NPM வரும் 16ஆம் தேதி 9,10,11,12ஆம் வகுப்புகள் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது. 2021 ஜனவரி இறுதி வாரத்தில் பள்ளிகளை திறக்கலாம் என்ற கருத்தை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை - மு.க.ஸ்டாலின். ----- கோவை:  அதிகாலை முதல் போலீஸ் நடத்திய அதிரடி சோதனையில் 32 ரவுடிகள் பிடிபட்டனர். கட்ட பஞ்சாயத்து, அடிதடி வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் உள்பட 32 பேரை போலீசார் கைது செய்தனர். ----- திருப்பதி கோயிலில் 24 மணி நேரமும் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும்: தேவஸ்தானம் தகவல் ----- ஆன்லைன் ரம்மி- யை தடை செய்வது குறித்து 10 நாளில் உரிய முடிவு எடுக்கப்படும் - தமிழக அரசு தகவல். ----- தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் 10ம் தேதி முதல் திரையரங்குகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. ----- கர்நாடக வயலின் இசைக் கலைஞர் டி.என். கிருஷ்ணன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல். ----- அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் இன்று வாக்குப்பதிவு: டிரம்ப்- ஜோ பைடன் இடையே கடும் போட்டி. ----- அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உய

Today News செய்திகள் 02.11.2020 | NPM

Image
 Today News 02.11.2020 | NPM திருப்பதி மலையப்ப சுவாமி கோவில்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8 மாதங்களுக்குப் பிறகு ஸ்ரீதேவி பூதேவியருடன் மலையப்ப சுவாமி கோவிலில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ----- வங்கிக் கடன் தவணைகளுக்கு வட்டி மீது வட்டி விதிப்பு தொகை.  வரும் 5ந்தேதிக்குள் வாடிக்கையாளர்கள் கணக்கில் செலுத்த ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல். ----- ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வலியுறுத்தி அவரது இல்லத்திற்கு அஞ்சல் அட்டை அனுப்பும் திட்டத்தை அவரது ரசிகர்கள் முன்னெடுத்துள்ளனர். இதனை அடுத்து அவரது வீட்டிற்கு அஞ்சல் அட்டைகள் வந்து குவிந்து கொண்டிருப்பதா கவும் அதில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் வாசகங்கள் இருப்பதாகவும் செய்திகள். ----- தமிழக வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க சுமார் 2,45,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்! ----- அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் வாட்ஸன் ஓய்வு. சி.எஸ்.கே.வின் கடைசி வெற்றியுடன் கண்ணீருடன் விடை பெற்றதாகத் தகவல். ----- 2.91 லட்சம் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு. ----- தமிழகத்தில் இன்று ஒரே

Today News செய்திகள் 30.10.2020 | NPM

Image
 Today News 30.10.2020 | NPM துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து உருவான சுனாமி: ஏகன் நகருக்குள் கடல்நீர் புகுந்ததால் பரபரப்பு. ரிக்டர் அளவில் 7 ஆகப் பதிவான பயங்கர நிலநடுக்கம் - இடிந்து விழுந்த கட்டடங்கள். கிரீஸ் நாட்டின் சமோஸ் தீவின் அருகே கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பல்கேரியா, கிரீஸ், வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம். ----- தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,22,011 ஆக உயர்வு. சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 723 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,99,173 ஆக அதிகரிப்பு. தமிழகத்தில் மேலும் 38 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 11,091 ஆக உயர்வு. தமிழகத்தில் ஒரே நாளில் 3,924 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 6,87,388 பேர் குணமடைந்துள்ளனர். ----- 7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக முதலமைச்சர் நன்றி தெரிவித்தார். மருத்துவ ப

Today News செய்திகள் 29.10.2020 | NPM

Image
 Today News 29.10.2020 | NPM வெங்காயம் விளைவிப்பதற்கான விதைகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது மத்திய அரசு. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிப்பு. ----- கொரோனா தொற்று: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,652 பேருக்கு தொற்று உறுதி, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,19,403 ஆக உயர்வு. ----- மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா-அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில் அரசாணை. மருத்துவக் கலந்தாய்வு தொடங்கப்பட வேண்டிய நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 7.5% உள் ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியீடு குறித்து ட்விட்டரில் முதல்வர் விளக்கம். சமூக நீதி காக்கவும், மாணவர்களின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாகவே அரசாணை வெளியீடு. 7.5% உள் ஒதுக்கீடு அரசாணை - மு.க.ஸ்டாலின் வரவேற்பு. ----- கணக்கில் வராத ரூ.150 கோடி கண்டுபிடிப்பு: கோயம்புத்தூர், ஈரோடு, சென்னை மற்றும் நாமக்கல்லில் கல்வி நிறுவனங்கள் நடத்தி வரும் ஒரு குழுமம் மற்றும் கட்டட ஒப்பந்ததாரர் ஒருவர் உ

Today News செய்திகள் 28.10.2020 | NPM

Image
Today News 28.10.2020 | NPM திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி, தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக முதல்வர் எடப்பாடிக்கு டுவிட். 800 திரைப்படம் தொடர்பாக எனது கருத்தை தெரிவித்தேன்; விஜய்சேதுபதிக்கு எதிராக ட்வீட் செய்ததாக தொடர்ந்து மிரட்டல் வருகிறது. அச்சிலேற்ற முடியாத அளவுக்கு ஆபாச வார்த்தைகளால் ட்வீட் செய்கின்றனர்! ----- 2021ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு. அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை. ----- சென்னை பல்கலைக்கழக அரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு: ஏப்ரல் மாதத்தில் தேர்வெழுத கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி. மாணவர்கள் 1.2 லட்சம் பேர் தேர்ச்சி. தமிழகத்தில் முதல் பல்கலைக்கழகமாக சென்னை பல்கலைக்கழகம் அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கியுள்ளது. ----- பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் நவ.7-ம் தேதி விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ அறிவிப்பு. ----- வீடியோ கான்பரன்சிங் மூலம் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. ----- மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி- க்கு கொரோனா தொற்று உறுதி. ----- நிதின் கட்கரி

Today News செய்திகள் 26.10.2020 | NPM

Image
Today News 26.10.2020 | NPM பாகிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 4.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.8 ஆக பதிவாகி உள்ளது. ----- இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்பு அமைச்சர் மார்க் டி எஸ்பர் (Mark T Esper) ஆகியோர், இன்று இந்தியா வருகை. ----- திருப்பதி கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன். நாளொன்றுக்கு 3 ஆயிரம் பேரை மட்டும் அனுமதிக்க முடிவு. ----- உலகளவில் கொரோனா தொற்று நிலவரம் பாதிப்பு:- 4.33 கோடி குணம்:- 3.19 கோடி உயிரிழப்பு:- 11.59 லட்சம் ----- தமிழகத்தில் காலியாக உள்ள 10,978 காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இப்பணியிடத்துக்கு இணையவழி வாயிலாக மட்டுமே www.tnusrbonline.org விண்ணப்பிக்க முடியும். ----- இன்று 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், திருவண்ணாமலை, கடலூரில் மழைக்கு வாய்ப்பு. ----- பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு.