Today News செய்திகள் 05.11.2020 | NPM

 Today News 05.11.2020 | NPM




ஹரியானா: தனியார் துறையில் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கே 75% வேலைவாய்ப்பு வழங்க வகைசெய்யும் சட்டம் ஹரியானாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

-----

சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் மருந்துக்கடையில் மருத்துவ படிப்பு படிக்காமல் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்த புவனகிரி தாலுக்கா கொத்தட்டை பகுதியைச் சேர்ந்த போலி மருத்துவர் ரமணன் வயது 35 என்பவர் மீது புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து அவரிடம் இருந்த மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

-----

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு-க்கள் அனைத்தையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்

-----

நடிகர் விஜய் புதிய கட்சியா..? எஸ்.ஏ. சந்திரசேகர் விளக்கம்:

அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய நான் தான் விண்ணப்பித்துள்ளேன். 

இது என்னுடைய முயற்சி தான்; விஜய்யின் அரசியல் கட்சி அல்ல எனவும் கூறினார்.

-----

டெல்லியில் பட்டாசுகளுக்கு தடை: கெஜ்ரிவால்

காற்று மாசு, கொரோனா பாதிப்பு சூழலை கருதி டெல்லியில் பட்டாசுகளுக்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கு படுக்கை வசதிகளை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

-----

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்:

டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33% போனஸ், 1.67% கருணைத் தொகை வழங்கப்படும்.

-----

10-ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிட வேண்டும், திரையரங்குகளுக்கு தயாரிப்பாளர்கள் கட்டுப்பாடு விதிக்க வேண்டாம்: அமைச்சர் செல்லூர் ராஜூ.

-----

தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்தது தமிழக அரசு.

தீபாவளியன்று காலை 6 முதல் 7 வரையிலும், இரவு 7 முதல் 8 வரையிலும் பட்டாசுகள் வெடிக்க தமிழக அரசு அனுமதி.

-----

சகாயம் போன்ற நல்லவர்களை எப்போதும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வரவேற்கிறோம். - கமல்.

-----

4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், நெல்லை, குமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும்- சென்னை வானிலை மையம்.

-----

“பள்ளிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் நவம்பர் 30ம் தேதி வரை மூடப்படும்!” - மேற்கு வங்க அரசு.

-----

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part I | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM