Today News செய்திகள் 12.11.2020 | NPM

 Today News 12.11.2020 | NPM


தமிழகத்தில் வரும் 16ம் தேதி பள்ளிகள், கல்லூரிகளை திறப்பதற்கான வாய்ப்பில்லை.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு - தமிழக அரசு.

-----

தீபாவளியை முன்னிட்டு ஆன்லைன் வகுப்புகளுக்கு 4 நாட்கள் விடுமுறை (12.11.2020 To 16.11.2020)

- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

-----

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் 




திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஆகியோரின் 'தீபாவளி' வாழ்த்து செய்தி.

-----

தமிழகத்தில் வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெறும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பீகாரில் பாஜக வெற்றி பெற்றது போல தமிழகத்திலும் வெற்றி பெரும் எனவும் தெரிவித்துள்ளார்.

-----

தெலுங்கானாவில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் உடனே தடை விதிக்க மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா சூழலில் மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்கிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்

-----

சென்னை: கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10% போனஸ் வழங்க தமிழக அசர ஒப்புதல் அளித்துள்ளது.

-----

திருச்செந்தூர் முருகர் கந்த சஷ்டி :



நவ.15-ம் தேதி தொடங்கும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி முதல் 5 நாட்களில் தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி. 6-ம் நாள் சூரசம்ஹார நிகழ்ச்சி, 7-ம் நாள் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை.

-----

ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகன போக்குவரத்து நெரிசலைக் குறைக்க காவல்துறையினர் இலவச அனுமதி அளித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.

-----

புதிதாக வடிவமைக்கப்பட்ட 2 கேம்களுடன் இந்தியாவில் மீண்டும் பப்ஜி அறிமுகமாகிறது. புதிதாக 100 பணியாட்களை அமர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிய பப்ஜி கேம்களை வடிவமைத்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

-----

தீபாவளி பரிசு வழங்குவது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் குற்றம்: நீதிமன்ற பணியாளர்களுக்கு போலீசார் அன்பளிப்பாக பட்டாசு, இனிப்புகளை வழங்க வேண்டாம்-தூத்துக்குடி நீதிபதி.

-----

சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவற்றிற்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-----

அக்.1 முதல் பணியில் சேர்ந்த புதிய தொழிலாளர்களுக்கு 24% பி.எஃப். தொகையை மத்திய அரசே செலுத்தும் - நிதியமைச்சர்.

மார்ச் 1 - செப். 30 காலகட்டத்தில் பணியை இழந்தவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் - நிர்மலா சீதாராமன்.

-----

அவசரக் கால மருத்துவ ஊர்தி சேவைக்காக 108 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

-----

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part I | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM