Today News செய்திகள் 11.11.2020 | NPM
Today News 11.11.2020 | NPM
அருள்மிகு காந்திமதி அம்பாள் சமேத சுவாமி நெல்லையப்பர் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.
-----
தமிழகத்தில் இன்று புதிதாக 2,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,50,409 உயர்வு.
சென்னையில் மட்டும் இன்று 571 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 2,06,588 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் இன்று 28 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 11,415 ஆக உயர்வு.
தமிழகத்தில் இன்று 2,210 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 7,20,339 பேர் குணமடைந்துள்ளனர்.
-----
தீபாவளி பரிசு வழங்குவது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் குற்றம்: நீதிமன்ற பணியாளர்களுக்கு போலீசார் அன்பளிப்பாக பட்டாசு, இனிப்புகளை வழங்க வேண்டாம்-தூத்துக்குடி நீதிபதி.
-----
20 லட்சத்திற்கும் மேலானோர் திமுகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளது பெரும் மகிழ்ச்சி என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-----
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் கணேசன் கைது செய்யப்பட்டுள்ளார். முறைகேடு புகார் மீதான விசாரணையில் முகாந்திரம் இருப்பதாக தெரிய வந்ததால் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
-----
பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரை:
பீகார் தேர்தலில் இத்தகைய வெற்றியை கொடுத்தது மக்களுக்கு நன்றி.
-----
டெல்லி: பட்டாசு வெடிக்க, விற்க தடை விதித்த நிலையில், தடையை மீறியதாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் தடையை மீறி விற்பனை செய்த 2,792 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-----
மேற்கு வங்கத்தில் நடப்பாண்டு 10 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது, அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர் - மம்தா பானர்ஜி.
-----
பள்ளிகளை ஜனவரி மாதம் வரை திறக்காமல் இருப்பதே நல்லது நீதிபதிகள் கருத்து.
-----
பஹ்ரைன் நாட்டு பிரதமரும் இளவரசருமாகிய கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா காலமானார். அவருக்கு வயது 84.
உலகிலேயே மிக நீண்ட காலமாக பிரதமராக பணியாற்றியவர் இவர்
-----
கொரோனாவுக்கான ஸ்புட்னிக் V தடுப்பு மருந்து 92% வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
-----
திண்டுக்கல்: தீபாவளியை முன்னிட்டு வரும் சனி, ஞாயிற்றுக்கிழமை ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் காய்கறி சந்தை மூடப்படுவதாக மார்க்கெட் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
-----
திருவண்ணாமலை மகா தீபம், தேர் திருவிழா நடத்துவது குறித்து நாளைக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-----
வெண்டிலேட்டர், ஏசி, எல்இடி பல்ப், ஸ்டீல், ஜவுளி உள்ளிட்டவற்றின் உற்பத்திக்காக, மருத்துவம், எலக்ட்ரானிக், ஆட்டோமொபைல் உள்ளிட்ட 10 துறைகளின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
ஜவுளி, உணவுப் பொருள் தயாரிப்பு, பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளும் இந்த ஊக்கத் தொகையைப் பெறும் - நிர்மலா சீதாராமன்.
-----
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-----
இனி மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் ஓ.டி.டி தளங்கள், செய்தி இணையதளங்கள்.
ஆன்லைன் செய்தி தளங்களையும், நெட்பிளிக்ஸ் போன்ற OTT தளங்களையும் செய்தி-ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் உத்தரவுக்கு, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
-----
"வழக்கறிஞர் ஸ்டிக்கர் : ஏன் தடைவிதிக்க கூடாது?" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் கூட வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டுவதால் அதனை ஏன் தடை செய்யக் கூடாது? - மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி.
-----
தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் அமைக்கப்பட உள்ளதாகவும் அதில் ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் ஒரு உதவியாளர் என மூன்று பேர் பணியில் இருப்பார்கள் எனவும் இந்த மினி கிளினிக் தினசரி மாலை தோறும் அனைத்து ஊர்களிலும் செயல்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
-----
மக்களின் தேவையற்ற அலைச்சலை தவிர்க்கும் விதமாக கட்டணத்தை வசூலிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி மின் கட்டண அளவீட்டை குறிக்க வரும் ஊழியர் மின் கட்டணத்தை குறித்ததும் அவரிடம் உள்ள பாயிண்ட் ஆப் சேல் கருவியின் மூலம் டெபிட் கார்ட் அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தி கட்டணத்தை உடனடியாக செலுத்தலாம்.
முதலாவதாக இது சோதனை முயற்சியாக சென்னை மாநகராட்சியில் மட்டும் அமல்படுத்த உள்ளதாகவும், வரவேற்பை பொறுத்து தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும்.
-----
நெல்லை மாநகரில் இந்து முன்னணி வால்போஸ்டர்கள்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 27-ம் தேதி தொடங்குகிறது.
-----
டெல்லியில் ஏற்பட்டுள்ள கடுமையான காற்று மாசு காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-----
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
ரூ.16 கோடியில் கட்டப்பட்ட புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் பழனிசாமி நேரில் திறந்துவைத்து பார்வையிட்டார்
-----
கொரோனா தாக்கத்தால் மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா 8 மாதங்களுக்கு பிறகு இன்று திறப்பு.
-----
Comments
Post a Comment