Today News செய்திகள் 19.11.2020 | NPM

Today News 19.11.2020 | NPM


டெல்லியில் முக கவசம் அணியாவிட்டால் 2000 ரூபாய் அபராதம்-டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு.



டெல்லியில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை.

-----

தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம் 19.11.20

1707 புது பேஷண்டுகள்

இதில் 471 சென்னைவாசிகள்.

66,365 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது.

2251 பேஷண்ட் டிஸ்சார்ஜான நிலையில் 19 பேர் பலி.

ஆக மொத்தம் 7,64,989 தொற்றாளி, 7,39,532 டிஸ்சார்ஜ் & 11,550 மரணங்கள்.

-----

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்.

-----

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக மூத்த ..எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்களை பற்றி இவர்கள் ஆய்வு செய்வர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதுல் ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கிர்லோஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

-----

குழந்தைகள் கடத்தல் வழக்குகளை முறையாக விசாரிக்காத தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.

-----

விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்-உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அறிவுரை.

விளையாட்டு வீரர்கள், நடிகர்களை பல லட்சம் இளைஞர்கள் பின்பற்றுகிறார்கள் என்பதை உணர வேண்டும்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் 13 பேர் இறந்துள்ளது வருத்தமளிக்கிறது - நீதிபதிகள்.

-----

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடி மாற்றம்.

கட்டண நிர்ணய குழு பரிந்துரைத்த கட்டணங்களுக்கும், அரசு வெளியிட்டுள்ள கட்டணங்களுக்கும் முரண்பாடு.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் ரூ. 3.85 லட்சம் முதல், ரூ. 4 லட்சம் வரை நிர்ணயித்தது கட்டண நிர்ணயக் குழு.

ஆனால் தமிழக அரசு ஒரு கல்லூரிக்கான கட்டணத்தை அதிகபட்சமாக ரூ. 4.15 லட்சமாக நிர்ணயித்துள்ளது.

சில கல்லூரிகளுக்கான கட்டணங்களை உயர்த்தியும், குறைத்தும் அறிவிப்பு.

-----

திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹார விழா பாரம்பரிய முறைப்படி கடற்கரையில்தான் நடைபெறும்.

பக்தர்களுக்கு அனுமதி இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தகவல்.

-----

அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

மதுரை, தேனி,  சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

அடுத்த இரு தினங்களில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், வடதமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்.

-----

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103 - வது பிறந்த நாளையொட்டி, புதுடெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மலர் அஞ்சலி செலுத்தினார்.

-----

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part I | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM