Today News செய்திகள் 07.11.2020 | NPM

 Today News 07.11.2020 | NPM



கமல்ஹாசன் பிறந்த நாளுக்கு மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி வாழ்த்து.

-----

மண்டல, மகரவிளக்கு பூஜை :  சபரிமலை ஐயப்பன் கோயிலில் புஷ்பாபிஷேகம் ரத்து :  கொரோனா அச்சத்தால் நடவடிக்கை

-----

அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சோதனையில் அக்.1 முதல் நவ.6 வரை ரூ.4.29 கோடி சிக்கியது.

லஞ்சம் பெற்று சோதனையில் பிடிபட்ட 16 அரசு அலுவலர்கள் கைது செய்யப்பட்டதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அறிக்கை.

-----

பாஜகவின் வேல் யாத்திரையை தடுக்கக் கூடாது என அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்.

முழு விவரங்களுடன் காவல் துறைக்கு கூடுதல் விண்ணப்பம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.

-----

வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று இடியுடன் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்.

-----

குஜராத்தின் ஹசிரா-கோகா இடையான படகுப் போக்குவரத்தை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர்.

-----

புதுவை-யில் எந்தவிதமான மதக்கலவரத்துக்கும் நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம் - முதல்வர் நாராயணசாமி.

-----

எஸ்பிஐ வங்கியின் இணையவழி சேவை நாளை (08.11.2020) ஒருநாள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

-----

காக்கிநாடாவில் சாலையில் குப்பைகளை கொட்டுபவர்களின் வீட்டு வாசலில் பதிலுக்கு குப்பைகளை கொட்டி நகராட்சி நிர்வாகம் அதிரடி

-----

இறுதி செமஸ்டர் தேர்வு எழுதாதவர்களுக்கான மறு தேர்வு தேதி அறிவிப்பு : அண்ணா பல்கலை

-----

வரும் 10ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 1,050 தியேட்டர்கள் திறக்கப்படும் - தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கம்.

-----

இ.ஓ.எஸ்-01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு

-----

தஞ்சை ஒரத்தநாடு முத்தம்மாள்புரத்தில்  50 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன காசி விஸ்வநாதர் கோயில் சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு.

-----

மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்களை வரும் 12ஆம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்.

மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு இதுவரை 27,400 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன - விஜயபாஸ்கர்.

தவறுதலாக பூர்த்தி செய்யப்படும் விண்ணப்பங்களை திருத்தம் செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது - விஜயபாஸ்கர்.

-----

கொரோனா பாதிப்புகளின் 2-வது அலை அச்சத்தினால் ஒடிசாவில் வருகிற டிசம்பர் 31-ந் தேதி வரை அனைத்து பள்ளி கூடங்களையும் மூடும்படி மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

-----

Comments

Popular posts from this blog

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part IV | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part I | NPM

Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ் – Part III | NPM