சட்டமன்ற தேர்தல்கள் குறித்த இன்றைய தகவல்கள் Assembly Elections News 2021 | NPM
TN Assembly Elections News 2021 | NPM
நாளை மாலையுடன் சட்டமன்ற
தேர்தல் பரப்புரை ஓய்கிறது; அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு
சேகரிப்பு.
*****
குடியுரிமை திருத்த சட்டத்தை
நாடாளுமன்றத்தில் ஆதரித்த அதிமுக, பாமக கட்சிகள் தற்போது அச்சட்டத்தை எதிர்ப்பது ஏன்
என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
*****
YouTube இல் 5 கோடிக்கும் மேற்பட்டோர் ஸ்டாலின்தான் வராரு! என்ற திமுகவின் தேர்தல் பிரச்சார பாடலை பார்த்துள்ளனர்.
*****
ஆயிரம்விளக்கு தொகுதி பாஜக
வேட்பாளர் குஷ்பு மீது வழக்கு.
தேர்தல் நடத்தை விதிமீறி
மசூதி அருகே பிரசாரம் மேற்கொண்டதாக தேர்தல் பறக்கும் படை புகார்.
புகாரை தொடர்ந்து வழக்கு
பதிவு செய்தனர் கோடம்பாக்கம் போலீசார்.
*****
நாளை காலை 10 மணி முதல்
மாலை 4 மணி வரை தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்வதற்கான
அடையாள அட்டை சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள செய்தி தகவல் தொடர்பு அதிகாரி
மூலம் வழங்கப்படுகிறது. அடையாள அட்டைக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கும் மட்டும்.
*****
நீலகிரி மாவட்டம் உதகையில்
பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் போஜராஜனுக்கு வாக்குகளை சேகரிக்க உதகை வருகை தந்திருந்தார்
திரைப்பட நடிகை நமிதா.
பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருக்கு
உங்கள் ஓட்டுகளை போடுங்கள் என்று பிரச்சாரம் செய்தார்.
*****
அம்மா மக்கள் முன்னேற்ற
கழக வேட்பாளர் அ.தி.மு.க.வில் இணைந்தார்
சேந்தமங்கலம் அம்மா மக்கள்
முன்னேற்ற கழக வேட்பாளர் பி.சந்திரன் திருச்செங்கோட்டில் அமைச்சர் தங்கமணி முன்னிலையில்
அதிமுகவில் இணைந்தார்.
*****
ஸ்ரீவில்லிப்புத்தூர் முன்னாள்
அதிமுக எம்.எல்.ஏ. பொன்னு பாண்டியன் கட்சியில் இருந்து விலகல் - அமைச்சர் ராஜேந்திர
பாலாஜி அலட்சியம் செய்வதாக குற்றச்சாட்டு.
*****
திருப்பூரில் அம்மா மக்கள்
முன்னேற்ற கழக வேட்பாளர் முன்னாள் மேயர் விசாலாட்சிதமிழ்நாட்டிலேயே அதுவும் திருப்பூரில்
முதல் முறையாக வேட்பாளர் நிருபர்களை சந்தித்துவாக்கு சேகரித்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள்
என்று கேட்டுக் கொண்டார்.
*****
அ.இ.அ.தி.மு.க அமைச்சர்கள் மற்றும்
கட்சி பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நேற்று மேற்கொண்ட சோதனையில்,
அரசியல் உள்நோக்கம் இருப்பதாக அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு தேர்தல் ஆணையத்திடம்
முறையிட்டுள்ளது.
*****
திருச்சி மாவட்டம், மணப்பாறை
சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணகோபாலை ஆதரித்து விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்
பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், எய்ம்ஸ்
மருத்துவமனை செங்கலை எடுத்து அதிமுகவிடம் அருமையான கேள்வியை உதயநிதி ஸ்டாலின் கேட்கிறார்.
நல்ல கேள்வி தான். ஆனால் உதயநிதி கச்சத்தீவில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து வரமுடியுமா?
அவர்கள் மீது குறையை வைத்துக் கொண்டு அடுத்தவர்களை பற்றி கேள்வி கேட்கிறார்கள் என பேசியுள்ளார்.
*****
புதுச்சேரியில்
இதுவரை ரூ.42.16 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருட்கள் பறிமுதல் - தேர்தல் அதிகாரி தகவல்.
*****
திமுக இளைஞரணிச் செயலாளர்
உதயநிதி ஸ்டாலின், தனது வீட்டு முகவரியைக் கொடுத்து முடிந்தால் அங்கு வந்து சோதனை செய்யுமாறு
வருமான வரித்துறையினருக்கு அழைப்பு விடுத்து பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து சீமானும்
வருமானவரித்துறை என் வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
" தன்னாட்சி அதிகாரம்
பெற்ற வருமான வரித் துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட இந்த அமைப்புகளை பிரதமர் மோடி ஐந்து
வருடங்களாக பயன்படுத்தி வருகிறார். அதை வைத்து மிரட்டி வருகிறார். அச்சுறுத்த கடைசி
ஆயுதமாக வருமான வரித்துறை சோதனை பயன்படுத்துகின்றனர். ஏன் என் வீட்டில் ஒரு முறையாவது
வருமானவரித்துறை சோதனை நடத்திப் பாருங்கள் பார்ப்போம்" என சவால் விடுத்தார்.
*****
கடந்த 28ம் தேதி பொள்ளாச்சி
அருகே ஒக்கிலிபாளையத்தில் திமுக தேர்தல் பரப்புரை கூட்டத்தின்போது அடிதடிகளில் ஈடுபட்ட
வழக்கில் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீனை கைது செய்ய மாவட்ட காவல்துறை உத்தரவு.
*****
போடி அருகே திருமலாபுரம் மாட்டு சந்தையில் தேர்தல் பறக்கும் படை சோதனை.
பணப்பட்டுவாடா செய்ததாக
அதிமுக முன்னாள் கவுன்சிலர் சித்தரஞ்சன் கைது.
சித்தரஞ்சனிடம் இருந்து
ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை கைப்பற்றியது தேர்தல் பறக்கும் படை.
*****
வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர்
போன்றவற்றில் தேர்தல் பிரசாரம் செய்ய கூடாது:
விதிமீறினால் 2 ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு.
நாளை இரவு 7 மணிக்கு மேல், தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேற வேண்டும்.
நாளை இரவு 7 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவுறுத்தல்.
தேர்தல் தொடர்பான ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தவோ, பங்கேற்கவோ கூடாது - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவுறுத்தல்.
*****
ஈரோடு: அந்தியூர் அருகே
தோப்பூரில் அதிமுகவினருக்கு சொந்தமான பள்ளியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
பள்ளியில் பணப்பட்டுவாடா
செய்வது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாக கிடைத்த புகாரால் நடவடிக்கை.
*****
திமுக ஊராட்சி மன்ற தலைவர்
ராமதிலகம் வீட்டில் வருமானவரி சோதனை.
புதுக்கோட்டை மாவட்டம்
திருமயம் அருகே கே.வி.கோட்டையில் உள்ள இல்லத்தில் சோதனை.
*****
தேனி அருகே அதிமுக நிர்வாகி
குறிஞ்சிமணி வீட்டில் வருமானவரி சோதனை.
தேனி மாவட்ட வருமான வரித்துறை
அலுவலர்கள் திடீர் ஆய்வு.
போடிநாயக்கனூரில் சுமார்
ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடரும் சோதனை.
தேர்தலுக்கு இன்னும் இரண்டு
தினங்களே உள்ள நிலையில், பல இடங்களில் தொடரும் ஐடி ரெய்டு.
*****
ஆலங்குளம் தொகுதி திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணாவின்
அம்மா ஆலங்குளம் தொகுதி மக்களுக்கு விடுத்துள்ள
வேண்டுகோள் தயவுசெய்து பூங்கோதைக்கு ஓட்டு போடாதீர்கள் நல்லவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள்
.
*****
புதுச்சேரியில் மதுபான
கடைகளுக்கு வரும் 7ம் தேதி வரை சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று இரவு முதல் வரும்
7ம் தேதி காலை வரை மதுபான கடைகளுக்கு சீல் வைக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
*****
Comments
Post a Comment