கொரோனா குறித்த இன்றைய தகவல்கள் Second Wave Covid updates | NPM
கொரோனா குறித்த இன்றைய தகவல்கள்:
தமிழகத்தில் மே 1 முதல் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்கள்:
கொரோனா
பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி முகாம்கள் - தமிழக
அரசு.
*****
பூதாகரமாகும்
ஆக்ஸிஜன் விவகாரம்; டிடிவி தினகரன் கண்டனம்.
நாடு
முழுவதும் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆக்ஸிஜன் தேவையும் தற்போது
அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழக மக்களுக்கு ஆக்சிஜன் தேவை இருக்கும் போது தமிழக
அரசு நிர்வாகத்தைக் கலந்து ஆலோசிக்காமல் வெளிமாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பும் மத்திய
அரசின் முடிவு கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் அறிக்கையில் கூறியுள்ளார்.
*****
தடுப்பூசி விலை உயர்வைத்
தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்திருப்பது மனிதநேயமற்ற செயல் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
*****
ஆக்சிஜன்,
ரெம்டிசிவர் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு அவசர நடவடிக்கை.
*****
மகாராஷ்டிராவில் பொதுமுடக்கத்திற்கு
நிகரான கட்டுப்பாடு இன்று இரவு 8 மணிமுதல் அமலுக்கு வருகிறது.
*****
தமிழகத்தில் நேற்று கொரோனாவால்
11,681 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை10,25,059ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 7,071 பேர் பூரண
நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 9,27,440ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் 53பேர்
பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை13,258 ஆக உயர்ந்துள்ளது. இதனால், ஆக்சிஜன் தேவையும்
அதிகரித்துள்ளது.
*****
தலைமைச் செயலகத்தில் பணியாற்றும்
ஊழியர்கள், பார்வையாளர்கள் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்.
பொது இடங்களில் எச்சில்
துப்பினால் ரூ.500, சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால்
ரூ.500 ரூபாய் அபராதம் - தமிழக அரசு.
*****
பிரதமர் நரேந்திர மோடி
தனது புரிதலின்மை மற்றும் தொலைநோக்கு பார்வை இல்லாததை மறைக்கவே தற்போதுள்ள நெருக்கடியைப்
புறக்கணிப்பதாக பிரசாந்த் கிஷோர் ட்வீட் செய்துள்ளார்.
தேர்தல் ஆலோசகர்களில் ஒருவரான
பிரசாந்த் கிஷோர் பிரதமர் மோடியை மிகக் கடுமையாகச் சாடி ட்வீட் செய்துள்ளார்.
*****
கொரோனா தினசரி பாதிப்பு 11 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், பரவலை தடுக்க
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர்
ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை.
*****
கடந்த 24 மணி நேரத்தில்
மகாராஷ்டிர மாநிலத்தில் 67,468 புதிய கொரோனா
தொற்று வழக்குகள் உறுதியாகியுள்ளது.
*****
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் எச்சூரியின் மகன் கொரானாவால் இன்று காலை உயிரிழந்தார்.
*****
புதுச்சேரி மத்திய சிறையில்
உள்ள 41 கைதிகள், 3 வார்டனுக்கு கொரோனா உறுதியானதால் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு.
சிறை முழுவதும் கிருமி
நாசினி தெளிக்கப்பட்டு கைதிகள் அனைவருக்கும் முக கவசம் வழங்கப்பட்டுள்ளது.
கைதிகள் அனைவரும் சமூக
இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தல்.
*****
காங்கிரஸ் மூத்த தலைவரும்,
டெல்லியின் முன்னாள் அமைச்சருமான டாக்டர் ஏ.கே.வாலியா கொரோனா தொற்று காரணமாக டெல்லியில்
உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.
*****
தமிழகத்தில் இருந்து ஆக்சிஜன்,
ரெம்டிசிவிர் மருந்து வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு - தாமாக முன்வந்து விசாரணைக்கு
ஏற்றது உயர்நீதிமன்றம்.
ஆக்சிஜன் விவகாரத்தில் பிற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலைமை தமிழகத்துக்கு வந்து விடக் கூடாது என உயர்நீதிமன்றம் அறிவுரை.
*****
தலைமை செயலாளர் ராஜீவ்
ரஞ்சன் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன்
தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை.
தமிழகத்தில் கொரோனா பரவல்
அதிகரித்து வரும் சூழலில் முக்கிய ஆலோசனை.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த
எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்.
*****
ஸ்டெர்லைட்டை அனுமதிக்கலாம்
- மத்திய அரசு.
ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி
செய்ய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு
வழக்கறிஞர்.
*****
ஆழ்வார்பேட்டையில் திமுக
தலைவர் ஸ்டாலின் 2-ம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும், நம்மையும், நாட்டு மக்களையும் பாதுகாப்போம் – ஸ்டாலின்.
*****
Comments
Post a Comment