கொரோனா குறித்த இன்றைய தகவல்கள் Second Wave Covid | NPM
கொரோனா குறித்த இன்றைய தகவல்கள்:
*****
கபசுர குடிநீர் வழங்க திமுகவுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி!
கபசுரக் குடிநீர் வழங்குங்கள்:
கட்சியினருக்கு ஸ்டாலின் கட்டளை.
*****
கன்னியாகுமரி மாவட்டத்தில்
மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!
*****
ஊரடங்கால் தடுப்பூசி பணி
பாதிக்கப்படக்கூடாது' - மத்திய அரசு அறிவுறுத்தல்.
*****
மே 2ஆம் தேதி மட்டும் ஊரடங்கு
பொருந்தாது: தேர்தல் ஆணையர் அறிவிப்பு.
*****
ஊரடங்கு உத்தரவு டாஸ்மாக்
கடைகளுக்கும் பொருந்தும்: தமிழக அரசு அறிவிப்பு
*****
மருத்துவம் உள்ளிட்ட 9
துறைகளுக்கு மட்டும் ஆக்சிஜன் விநியோகம்" - மத்திய அரசு.
*****
வரலாற்றில் 2-ம் அலை தான்
ஆபத்தாக இருந்துள்ளது: எய்ம்ஸ் தலைவர்
டில்லி
எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா, “நூறாண்டுகளுக்கு
முந்தைய தொற்றுநோயை பார்த்தால் இரண்டாம் அலை தான் ஆபத்தானது”
என கூறியுள்ளார்.
*****
டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல
பகல் 12 மணிக்கு திறக்கப்படும். இரவில் ஒரு மணி நேரம் முன்னதாக 9 மணிக்கே அரசு மதுக்கடைகள்
மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில்
முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்றும்
தெரிவித்துள்ளது.
*****
14.19 கோடியை தாண்டியது
உலக கொரோனா பாதிப்பு!
*****
தமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு
தட்டுப்பாடு இல்லை: விஜயபாஸ்கர்.
*****
கொரோனா பணி; அரசியல் கட்சிகளுக்கு
அனுமதி!
*****
நாக்கு வறட்சி, கண்வலி,
தலைவலி இருந்தாலும் அலட்சியம் வேண்டாம் - கொரோனாவுக்கு புதுப்புது அறிகுறிகள்.
*****
கொரோனாவை சமாளிக்க துரித
நடவடிக்கை: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்
*****
தடுப்பூசி குறித்த வதந்திகளை
நம்ப வேண்டாம்.
*****
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில்
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் அமலாகும் முழு ஊரடங்கின்போது
இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட் செயல்பட அனுமதி கிடையாது.
ஞாயிற்றுக்கிழமைகளில் அமலாகும்
முழு ஊரடங்கின்போது, காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகளும் செயல்பட அனுமதியில்லை.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது, தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் உட்பட செயல்பட
அனுமதிக்கப்படாது.
*****
ரயில் நிலையங்களில் பயணிகள்
முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்!
*****
சென்னை மருத்துவமனையில்
முத்தையா முரளிதரன் அனுமதி!
இலங்கை முன்னாள் கிரிக்கெட்
அணியின் முத்தையா முரளிதரன் சென்னை மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருப்பது
கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
*****
மருத்துவப் பயன்பாட்டிற்கான
ஆக்சிஜனை ரயில்களில் எடுத்துச் செல்வதற்கு ரயில்வே நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களுக்கு சிகிச்சை
அளிப்பதற்கான செயற்கை ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. எனவே, மருத்துவப் பயன்பாட்டுக்கான
ஆக்சிஜனை திரவ நிலையில், ரயில்களில் எடுத்துச் செல்வதற்கு மத்திய பிரதேசம் மற்றும்
மகாராஷ்டிரா அரசுகள் கோரிக்கை விடுத்திருந்தன. அதனை ஏற்ற ரயில்வே நிர்வாகம், திரவ ஆக்சிஜனை
உறைநிலைக்குக் கீழான வெப்பநிலையில் வைத்து, ரயில்களில் எடுத்துச் செல்வதற்கு அனுமதி
வழங்கியுள்ளது.
*****
கொடைக்கானலில் வியாபாரிகள்
போராட்டம்:
கொரோனா பரவல் அதிகரித்து வருவதை முன்னிட்டு, சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவதற்கு அரசு தடை விதித்தது. இதனை அடுத்து, அங்குள்ள வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
*****
டாஸ்மாக் கடைகள் செயல்படும்
நேரம் அறிவிப்பு:
தமிழகத்தில் நாளை முதல் (ஏப்.20) டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 9மணி வரை செயல்படும். மேலும், ஞாயிற்று கிழமைகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது- அரசு அறிவிப்பு
*****
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில்
மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
தடுப்பூசி மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர் அமைக்க வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்.
*****
Comments
Post a Comment