சட்டமன்ற தேர்தல்கள் குறித்த இன்றைய தகவல்கள் Assembly Elections News 2021 | NPM
TN Assembly Elections News 2021 | NPM நாளை மாலையுடன் சட்டமன்ற தேர்தல் பரப்புரை ஓய்கிறது; அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு. ***** குடியுரிமை திருத்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்த அதிமுக, பாமக கட்சிகள் தற்போது அச்சட்டத்தை எதிர்ப்பது ஏன் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ***** YouTube இல் 5 கோடிக்கும் மேற்பட்டோர் ஸ்டாலின்தான் வராரு! என்ற திமுகவின் தேர்தல் பிரச்சார பாடலை பார்த்துள்ளனர். ***** ஆயிரம்விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்கு. தேர்தல் நடத்தை விதிமீறி மசூதி அருகே பிரசாரம் மேற்கொண்டதாக தேர்தல் பறக்கும் படை புகார். புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்தனர் கோடம்பாக்கம் போலீசார். ***** நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்வதற்கான அடையாள அட்டை சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள செய்தி தகவல் தொடர்பு அதிகாரி மூலம் வழங்கப்படுகிறது. அடையாள அட்டைக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கும் மட்டும். ***** நீலகிரி மாவட்டம் உதகையில் பாரதிய ஜனதா க