Posts

Today News செய்திகள் 10.10.2020 | NPM

Image
Today News 10.10.2020 | NPM திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி, கரையான்சாவடி கிளை சிறையில் கைதியை பார்க்க கஞ்சாவுடன் சிறைக்கு சென்ற இளம்பெண் கைது. ------- சென்னையில் 9 வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ .84.14 க்கும் , ஒரு லிட்டர் டீசல் ரூ .75.95 க்கும் விற்பனை . ------- சென்னை வடக்கு மண்டலத்தில் ஒரே காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகள் பணி முடித்த 98 காவலர்களுக்கு வேறு காவல் நிலையங்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. ------- உலக மனநல தினம் மனநலப் பிரச்சினைகள் குறித்த உலக மக்களின் விழிப்புணர்வை அதிகரித்தல் மற்றும் மனநலத்தை மேம்படுத்துவதற்கான ஆதரவை ஒருங்கிணைத்தல் ஆகிய நோக்கங்களுடன் அக்டோபர் 10-ம் நாளை உலக மனநல நாளாக ஐநா சபையின் துணை அமைப்பான உலக சுகாதார நிறுவனம் (WHO) 1992 முதல் அனுசரித்துவருகிறது நீங்கள் நம்பும் ஒருவரிடம் உங்கள் பிரச்சனைகளை மனம் விட்டு பேசுங்கள்.. பேசினால் தீராத விஷயம் என்று இந்த உலகில் எதுவுமில்லை... ------- ஓபிஎஸ் இன்று திருப்பதி தரிசனம். ------- மதுரையில் இடைவிடாத கனமழை.   இரண்டு மணி நேரமாகக் கொட்டி

Today News செய்திகள் 09.10.2020 | NPM

Image
Today News 09.10.2020 | NPM தமிழகம் முழுவதும் 2,650 கோடி மதிப்பிலான ஊராட்சி மன்றங்களின் சாலை மேம்பாட்டு டெண்டர் களை ஊராட்சி  மன்றங்களின் அனுமதி இல்லாமல், அதிகாரியிட்ட அறிவிப்பாணையை  சென்னை நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ------- சென்னை மியாட் மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் டிஸ்சார்ஜ் : கொரோனா சிகிச்சைக்கு பிந்தைய தொடர் மருத்துவ கண்காணிப்பிற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . விஜயகாந்த் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் - மியாட் மருத்துவமனை ------- நேற்று (08.10.2020) மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடல் நலக்குறைவால் காலமானார். டெல்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் திரு. ராம்விலாஸ் பாஸ்வான் - முதல்வர் பழனிசாமி இரங்கல்! மத்திய

Today News செய்திகள் 07.10.2020 | NPM

Image
தமிழ் செய்திகள் 07.10.2020 அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி கே . பழனிசாமி - அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு . 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி பெயரை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார். சென்னை மெரினாவில் உள்ள எம் . ஜி . ஆர் ., ஜெயலலிதா நினைவிடத்தில் ஈபிஎஸ் , ஓபிஎஸ் மரியாதை முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை அடுத்து மரியாதை. அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களும் மரியாதை. -------- தன்னை தீவிரவாதிகள் கொல்ல சதி செய்வதாகக் கூறி சொந்த வாகனத்தை எரித்து நாடகமாடிய இந்து அதிரடிப்படையின் பொதுச் செயலாளர் ராஜகுருவை (கோபி அருகே கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர்) போலீஸார் கைது செய்துள்ளனர். -------- விழுப்புரம்: செங்கோட்டை - சென்னைக்கு சென்ற தனியார் பேருந்து மயிலம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்து 15 பேர் காயம் ஓட்டுநரின் கவனக்குறைவால் சாலையோர பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தகவல். -------- கொரோனாவுக்கான தடுப்பு மருந்து இவ்வருட இறுதியில் கிடைக்கும்

Weekly Cinema சினிமா செய்திகள் 06.10.2020

Image
இந்த வார சினிமா செய்திகள் தீபாவளிக்கு வெளிவருமா ' மாஸ்டர் ' ? விஜய் நடித்துள்ள ' மாஸ்டர் ' படம் தியேட்டர்களில் மட்டும்தான் வெளியாகும் என்று அறிவித்துவிட்டார்கள். நவம்பர் மாதம் 14 ம் தேதி தீபாவளி வருகிறது.  எனவே , அன்றைய தினம் ' மாஸ்டர் ' படம் வெளிவந்தால் சரியாக இருக்கும் . …… நாய்க்கு டப்பிங் - நடிகர் சூரி   ஸ்ரீநாத் ராமலிங்கம் ' அன்புள்ள கில்லி ' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிகை சிவரஞ்சனியின் மகன் மைத்ரேயா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் கில்லி என பெயர் கொண்ட நாய் ஒன்று நடிக்க வைக்கப்பட்டுள்ளது. இந்த நாயின் குரலில் திரைக்கதை நகர்வது போன்று கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாய்க்கு காமெடி நடிகர் சூரி டப்பிங் கொடுத்துள்ளார். …… சினிமா தியேட்டர்கள் திறக்க - கட்டுப்பாடுகள் வெளியீடு சில நாட்களுக்கு முன் 50 சதவீத பார்வையாளர்களுடன் அக். , 15 முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கிய மத்திய அரசு இன்று (அக். , 6) அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.   ·          50 சதவீத இருக்கைகளில் மட்டும் ரசிகர்களை அனுமதித்து தியேட்டர்களை

Today News செய்திகள் 05.10.2020 | NPM

Image
 செய்திகள் 05.10.2020 கள்ளக்குறிச்சி: அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு (34)   தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த தனது காதலி சௌந்தர்யாவுக்கும் இன்று திடீர் திருமணம் நடந்தது. தியாகதுருகத்தில் உள்ள எம்எல்ஏ இல்லத்தில் எம்எல்ஏவின் பெற்றோர்கள் தலைமையில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது ------- பிரியங்கா காந்தியிடம் கடுமையாக நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கோருவதாக உத்தர பிரதேச போலீஸ் தெரிவித்துள்ளது ------- புதுச்சேரி , காரைக்காலில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் , வரும் 8 ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் . இன்று முதல் 7 ம் தேதி வரை வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு , தனிநபர் இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்படவுள்ளன . வாரத்தில் 6 நாட்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் . 9 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ள விருப்பத்தின் பேரில் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம் . திங்கள் , புதன் , வெள்ளிக்கிழமைகளில் , 9, 11 ம் வகுப்பு மாணவர்களுக்கும் , செவ்வாய்